என்னங்க இது? வானில் பயணித்த ஒளி வெள்ளம்.. விண்கற்கள் பொழிவு என பரவிய தகவலால் மக்கள் பீதி.!
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் வானத்தில் மிக வேகமாக பயணித்த ஒளி வெள்ளத்தின் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தாலும் விண்கற்கள் விழுவதாக பரவிய தகவலால் மக்கள் பீதி அடைந்தனர்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் இருந்து இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
விண்ணில் விண்கற்கள் பயணிக்கும் போது பிரகாசமான கோடுகள் உருவாவது வழக்கம். மிகவும் அற்புதமான இந்த காட்சிகள் பெரும்பாலும் கேமராவில் சிக்குவது கிடையாது.

ஷூட்டிங் ஸ்டார்ஸ் விண்கல்
'ஷூட்டிங் ஸ்டார்ஸ்' என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறை போன்றபொருட்களாகும். அவை பூமியின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய வேகத்தில் நுழைகின்றன. விண்வெளியில் ஒரு தூசி நிறைந்த பகுதியைக் கடக்கும்போது அதிவேகமாக அதாவது வினாடிக்கு 30 முதல் 60 கிமீ வேகத்தில் நுழைகின்றன.

விண்கல் மழை
அப்போது விண்கல் மழை என்று அழைக்கப்படும் ஒளிக் கோடுகளை உருவாக்குகின்றன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு மக்கள் பீதிக்குள்ளாவதற்கு என்ன சம்பந்தம் என கேட்கலாம். நமக்கு இதுகுறித்து தெரியாவிட்டாலும், மகராஷ்டிர மக்கள் கண்டிப்பாக பயந்துதான் ஆக வேண்டும் அதற்கும் காரணம் உண்டு.

லோனார் ஏரி
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய குளம் ஒன்றும் உருவாகியிருக்கிறது. அது மகராஷ்டிர மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் இப்போதல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்

மக்கள் அச்சம்
அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது. இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. அதனால் எப்போது விண்கல்லை பார்த்தாலும் அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாவதற்கு காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications