Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதற்றம் வேண்டாம்..இந்தியாவில் குரங்கு அம்மை கண்டறியப்படவில்லை.. மத்திய அரசு ஆறுதல்

மக்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பை கண்டு பதற்றம் அடையக் கூடாது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து விட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை

உடல் வலி,தழும்புகள்,காய்ச்சல்,நிணநீர் அழற்சி,ஊண் திரள் போன்றவை குரங்கு அம்மை ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என கனடா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை நோய் பாதிப்பை தடுப்பதற்கு சரியான வழிமுறைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி கையிருப்பு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. "இந்த நோயின் தீவிரம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான் ஏற்கனவே கூறியதை போன்றே, அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதால், நாம் ஒரு நாடாக மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். இப்போதே சரியான நடவடிக்கைகளை எடுக்க துவங்கினால், இந்த நோய் பாதிப்பை நம்மால் எளிதில் தடுத்து நிறுத்தி விட முடியும் எனவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க இதுவே நமக்கு மிக சரியான தருணம், என உலக சுகாதார மையத்தின் இயக்குனர் சில்வி பிரியண்ட் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தினால் பரவலை தவிர்க்கலாம்

தனிமைப்படுத்தினால் பரவலை தவிர்க்கலாம்

மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இதனை கட்டுப்படுத்த தயாராக, உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் தான் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் தொற்று பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும் என்றும் சில்வி பிரியண்ட் தெரிவித்துள்ளார்.

 குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குரங்கு அம்மை நோய் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவர்கள்

இந்திய மருத்துவர்கள்

குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். சின்ன அம்மை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் ஊசியை வயதானவர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். 1980ஆம் ஆண்டுகளுக்கு பின் சின்ன அம்மை நோய் வரவிடாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஊசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இளம் வயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் டாக்டர் அபர்னா முகர்ஜீ கூறியுள்ளார்.

 குரங்கு அம்மை குறித்து பதற்றம் வேண்டாம்

குரங்கு அம்மை குறித்து பதற்றம் வேண்டாம்

மக்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பை கண்டு பதற்றம் அடையக் கூடாது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து விட வேண்டும். இந்த நோய் பாதிப்பு குறித்து மக்கள் பதற்றம் அடையக் கூடாது, இதன் அறிகுறிகள் இது நெருங்கி பழகினால் தான் பரவும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே ஐசிஎம்ஆர் என்.ஐ.வி. தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவில் பாதிப்பு இல்லை

இந்தியாவில் பாதிப்பு இல்லை

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்களிடம் இருந்து பொது மக்கள் விலகி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+