ஜீவனாம்சம்.. மனைவிக்கு மாத சம்பளம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு பராமரிப்பு செலவை கணவன் கட்டணும்: HC
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி, குழந்தைகளைக் கவனிப்பது தந்தை-தாய் இருவரின் கடமை என்பதை கூறியுள்ளது. ஒரு தந்தை, "என் சம்பளம் குறைவு, மனைவி அதிகம் சம்பாதிக்கிறார், எனவே நான் குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை கொடுக்க முடியாது" என்று வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் இதை ஒத்துக்கொள்ளவில்லை. என்ன நடந்தது தெரியுமா?
2014 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர் அந்த தம்பதியர்.. ஆனால், கணவர் மனைவியை உடல், மன மற்றும் பொருளாதார ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்பட்டதால் பிரிந்தனர்.

குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு
மனைவி, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை கோரி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். 2023-ல் விசாரணை நீதிமன்றம், மூன்று குழந்தைகளுக்காக தந்தை மாதம் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000, மொத்தம் ரூ.30,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
உடனே தந்தை, அதை எதிர்த்து மேல்முறையிலும் மனு தாக்கினாலும், 2024-ல் செஷன்ஸ் நீதிமன்றம் அதை நிராகரித்தது.
அப்போது தந்தை கோர்ட்டில் வாதிடும்போது, "என் மாத வருமானம் ரூ.9,000 மட்டுமே. மனைவி அதிகமாக சம்பாதிக்கிறாள். எனவே முழு பராமரிப்பை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டத்திற்கு எதிராகவும், பராமரிப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது" என வாதிட்டார்.
ஜீவனாம்சம்
உடனே மனைவி தன் தரப்பில் வாதிடும்போது, ""நீதிமன்ற உத்தரவு மட்டும் குழந்தைகளுக்கான பராமரிப்புக்கே தொடர்புடையது. நான் கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை தானே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் சம்பளம் அதிகமாக இருப்பது, தந்தையின் கடமையை நீக்க முடியாது" என்றார்..
மனைவி அதிக சம்பளம்
இதையடுத்து உயர்நீதிமன்றம், "குழந்தைகளை பராமரிப்பது இரு பெற்றோரின் சட்டபூர்வ மற்றும் சமூக கடமை. யார் அதிக சம்பாதிக்கிறார்கள் என்பதால், மற்றோர் பெற்றோரின் பொறுப்பு குறையாது. மேலும், குழந்தைகள் தாயின் காவலில் இருப்பதால், தாய் முதன்மை பராமரிப்பாளராகவும், தந்தை தேவையான பராமரிப்பு செலவை கொடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்.
குழந்தைகளை வளர்ப்பது தந்தை-தாயின் பொறுப்பு; சம்பளம் குறைவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பை இருவரும் வழங்க வேண்டும்" என்று அதிரடியாக நேற்று தீர்ப்பளித்துள்ளது.
தட்டிக்கழிக்க முடியாது
இந்த நேரத்தில், கடந்த 2011-ல் டெல்லி ஹைகோர்ட் வேறொரு வழக்கில் பிறப்பித்திருந்த மற்றொரு வழக்கையும் இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது..
அதாவது, டெல்லியில் வசித்து வரும் ஒரு தம்பதி விவாகரத்து பெற்றனர். இதுகுறித்து டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பில் அப்போது சொல்லும்போது, "தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளதால், தந்தை அவர்களுக்கு மாதம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மகன் 18 வயது ஆகும் வரை, மகள் வேலைக்கு செல்லும் வரை அல்லது திருமணம் செய்யும் வரை தந்தை செலவு வழங்க வேண்டும்.
இப்போது மகன் இன்னும் படித்து வருகிறார், ஆனால் தந்தை பராமரிப்பு செலவை நிறுத்தியுள்ளார். நீதிமன்றம் சொல்லியது: மகன் படிப்பு முடியும் வரை தந்தை மாதம் ரூ.15,000 கொடுக்க வேண்டும். தாய் தனிப்பட்ட செலவாக இல்லாமல், தந்தை கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.
தந்தையின் கடமை முடிந்து விடாது
அதாவது மகனுக்கு 18 வயது ஆனதும் தந்தையின் கடமை முடிந்து விடாது என்று ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த இந்த உத்தரவு பொதுமக்களின் கவனத்தை அப்போது பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது மற்றொரு வழக்கில், மனைவி அதிகமாக சம்பாதித்தாலும், குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவை வழங்குவதில் இருந்து தந்தை தப்பிக்க முடியாது" என்று அதிரடியான தீர்ப்பை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications