டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் சிறு குறு தொழில்கள் வளர்கிறது.. ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பே சாட்சி: பொருளாதார ஆய்வறிக்கை

ஜிஎஸ்டி வசூல் அதிகமாக இருப்பதே சிறு குறு தொழில்கள் வேகமாக வளர்ந்து வருவதற்கு சாட்சி என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி அதிகமாக வசூலாவதை வைத்து பார்த்தாமேயானால் சிறு குறு தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு ஆதாரமாக உள்ளது என 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்த உரை நிகழ்ந்த பிறகு மத்திய நிதியமைச்சர் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

இதில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, நெருக்கடியான சமயங்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டு என்னவாக இருந்தது போன்ற விஷயங்களை வெளிப்படுத்துவதே பொருளாதார ஆய்வறிக்கை. இதில் பட்ஜெட்டுக்கு தேவையான அனைத்து துறைகள் குறித்த தகவல்களும் இருக்கும்.

6-7 ஆண்டுகால பொருளாதார சரிவை 2 ஆண்டுகளில் சரிசெய்து வருகிறோம்.. “இனி வேகம்தான்” : அமைச்சர் பிடிஆர் 6-7 ஆண்டுகால பொருளாதார சரிவை 2 ஆண்டுகளில் சரிசெய்து வருகிறோம்.. “இனி வேகம்தான்” : அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அந்த வகையில் இன்றைய தினம் அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் ஜிஎஸ்டி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜிஎஸ்டி அதிகம் வசூலினாதே சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது சான்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு குறு தொழிலாளர்கள்

சிறு குறு தொழிலாளர்கள்

சிறு குறு தொழிலாளர்கள் கடன் பெறுவதில் இருந்த பிரச்சினைகளை அவசர கால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) எளிமைப்படுத்தியுள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரியானது கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி நாடு முழுவதும் அமலானது. இந்த தினம் ஆண்டுதோறும் ஜிஎஸ்டி நாளாக கொண்டாடப்படுகிறது.

மாநிலத்திற்கு மாநிலம் வரியில் மாற்றம்

மாநிலத்திற்கு மாநிலம் வரியில் மாற்றம்

அதாவது மாநிலத்திற்கு மாநிலம் பொருட்கள் மீது வெவ்வேறாக இருந்த வரியை மாற்றி நாடு முழுவதும் ஒரே வரி எனும் முறைதான் ஜிஎஸ்டி. நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மத்திய அரசு விதித்துள்ள வரியில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும் 50 சதவீதம் மாநில அரசுக்கும் கிடைக்கும். இந்த ஜிஎஸ்டிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கூட பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வைரத்திற்கு ஜிஎஸ்டி குறைக்கும், ஏழைகள் பயன்படுத்தும் குடை உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிகரித்தும் இருந்தது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டியால் பெரும்பாலான தொழில்கள் பாதிப்பை சந்தித்ததாக கூறிய நிலையில் தற்போது அரசோ ஜிஎஸ்டி மூலம் அதிக அளவு வருவாய் சிறு குறு வியாபாரிகளிடம் இருந்து வந்ததாக சொல்கிறது. அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், முத்ரா கடனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாகவே செயல்படுத்தப்படுகிறது. இது மேற்கண்டவர்கள் கடன் பெறுவதை எளிமையாக்குகிறது.

English summary
The Economic Survey 2022-23 says: "Recovery of MSMEs is proceeding apace, as is evident in the amounts of Goods and Services Tax (GST) they pay, while the Emergency Credit Linked Guarantee Scheme (ECGLS) is easing their debt servicing concerns".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X