டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத் தேசிய பூங்காவில் துள்ளி குதித்து ஓடும் 3000 புல்வாய் மான்கள்.. சிறப்பு என பிரதமர் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநிலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புல்வாய் மான்கள் சாலையை கடக்கும் வீடியோ சூப்பராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    குஜராத் தேசிய பூங்காவில் துள்ளி குதித்து ஓடும் 3000 புல்வாய் மான்கள்.. சிறப்பு என ட்வீட் போட்ட பிரதமர்

    புல்வாய் மான் எனப்படும் பிளாக் பக்ஸ் என்பது ஒரு வகை மான் இனமாகும். இது மிகவும் வேகமாகச் செல்லும் விலங்காகும். ஆந்திர பிரதேசத்தின் மாநில விலங்காகவும் திகழ்கிறது.

    இவை எப்போதுமே மந்தைகளாகவே வாழும் தன்மை கொண்டது. இவை அதிகளவில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம், கிண்டி தேசிய பூங்கா, தால் சாப்பார் தேசிய பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் அமெரிக்கா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.

    Narendra Modi says excellent for the video shared about Gujarat

    குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான குஜராத் இன்பர்மேஷனில் குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள புல்வாய் மான் தேசிய பூங்காவில் 3000 -க்கும் மேற்பட்ட புல்வாய் மான்கள் சாலையை கடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இடம்பெற்றது.

    துள்ளிக் குதித்து ஓடும் இந்த மான்களை பார்க்கவே அழகாக இருக்கிறது. எத்தனை வேகம்? ஒரு ஆர்க் போல பாய்ந்து ஓடுகிறது. ஏதோ காற்றில் மிதப்பது போன்ற வேகம்! இந்த வீடியோவை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு என பதிவிட்டுள்ளார்.

    பிரதமராக உள்ள நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PM Narendra Modi says Excellent for a video which has the caption Over 3000 blackbucks were seen crossing the road at Bhavnagar's Blackbuck National Park.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X