75வது சுதந்திர தினம்..பிரதமர் மோடியால் அதிகரித்த தேசியக்கொடி விற்பனை.. பூரிப்பில் வியாபாரிகள்!
டெல்லி: இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‛ஹர் கர் திரங்கா' பிரசாரத்தால் வழக்கத்தை விட அதிகளவில் தேசியக்கொடி விற்பனையாகி வருகிறது. கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் தேசியக்கொடி விற்கும் வியாபாரிகள் பூரிப்பில் உள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டாக 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் பிரசாரத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகரித்த தேசியக்கொடி விற்பனை
மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் பாஜகவினர் தேசியக்கொடி ஏந்தி பைக் ஊர்வலம் மற்றும் நடந்து பேரணி சென்று வருகின்றனர். நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுக்கூறி அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் தற்போது தேசியக்கொடியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் தேசியக்கொடி உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் தேசியக்கொடி உற்பத்தி செய்யும் தொழிலாளிகள் மற்றும் விற்பனையாளர்கள் மகி்ச்சியடைந்துள்ளது.

பெங்களூர் வியாபாரி
இதுபற்றி பெங்களூருவை சேர்ந்த கடைக்காரர் ஒருவர் கூறுகையில், ‛பிரதமர் மோடி அறிவித்த 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தால் தேசியக்கொடிக்கான தேவை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான தேசியக்கொடியை நாங்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் ஆண்டுகளில் இதேபோன்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்'' என கூறியுள்ளார்.

கொல்கத்தா வியாபாரி
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா வியாபாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஹர் கர் திரங்கா பிரசாரத்தால் தேசியக்கொடி விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளல் தயாரிப்பும் உயர்ந்துள்ளது. மேலும் காதி, சில்க் மட்டுமின்றி பிற வகையான தேசியக்கொடியும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்'' என்றார். இன்னொரு வியாபாரி கூறுகையில், ‛‛எங்கள் கடைக்கு ஏராளமான அப்பார்ட்மென்ட்களில் இருந்து தேசியக்கொடி கேட்டு ஆர்டர் குவிந்துள்ளது. தற்போது தேசியக்கொடி தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நான் பல ஆண்டுகளாக தேசியக்கொடி விற்பனை செய்து வந்தாலும் கூட இந்த ஆண்டு தான் மக்கள் அதிகளவில் தேசியக்கொடியை வாங்குகின்றனர்'' என்றார்.

திருவனந்தபுரம் வியாபாரி
இதுபற்றி திருவனந்தபுரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக்கொடிக்கான தேவை அதிிகரித்துள்ளது. ஹர் கர் திரங்கா பிரசாரம் அறிவிப்பின் காரணமாக மக்கள் ஏராளமானவர்கள் தேசியக்கொடியை வாங்கி பயன்படுத்த துவங்கி உள்ளனர்'' என்றார்.

தபால் நிலையத்தில் விற்பனை
மேலும் தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் தபால் துறையில் உதவி இயக்குனராக உள்ள ஆர்எஸ் சர்மா கூறுகையில், ‛‛ஹர் கர் திரங்கா பிரசாரத்தால் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை என்பது இது தான் முதல் முறையாகும்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications