காமராஜர் பெயரில் நவோதயா பள்ளி.. “நாங்க ரெடி” டெல்லியில் அண்ணாமலை வீசிய வெடி.. திமுகவுக்கு குடைச்சல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நவோதயா பள்ளியை தமிழகத்தில் கொண்டு வந்து காமராஜர் பெயரில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி பயிற்றுவிக்கத் தயாராக இருக்கிறோம், நவோதயா பள்ளிக்கு தமிழக அரசு அனுமதி வழங்குமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா பள்ளிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும் என்ற அமித்ஷா குழுவின் பரிந்துரைகளை திமுக அரசு எதிர்த்து வருகிறது.

இந்தி திணிப்பு முயற்சியாக இருக்கும் நாடாளுமன்ற அலுவல் மொழிகளுக்கான குழுவின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில், அண்ணாமலை திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் திட்டம் கொண்டு வரத் தயார் என அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் அண்ணாமலை

டெல்லியில் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காசியில் மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட இருக்கும் "காசி தமிழ் சங்கமம்" என்ற நிகழ்ச்சியை தமிழக பாஜக சார்பில் வரவேற்பதாகத் தெரிவித்தார். அதேவேளையில் தமிழக அரசும் முன் நின்று இதனை மக்களிடம் ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

திமுகவுக்கு புதிதல்ல

திமுகவுக்கு புதிதல்ல

மேலும் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி மொழியை வைத்து திமுக அரசியல் செய்வது ஒன்றும் புதிதல்ல என்றும், தமிழக சட்டப்பேரவையில் இந்தி மொழி எதிர்ப்பு தொடர்பான தீர்மானத்தின் போது தமிழக முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

 புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை

மேலும், ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது போல எட்டாவது அட்டவணையில் இருக்கக்கூடிய 22 மொழிகளும் மத்திய அரசின் ஆட்சி மொழி தான் எனவும், புதிய கல்விக் கொள்கையில் கூறியுள்ளது போலமூன்று மொழிகள் வேண்டும். மூன்றாவது மொழி தங்களுக்கு விருப்பப்பட்ட மொழிகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்
என்பதுதான் மத்திய அரசின் கருத்து எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை சவால்

அண்ணாமலை சவால்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் தொடர்பாக பேசும் தமிழக அரசு மற்றும் திமுக, தமிழகத்தில் நவோதயா பள்ளியை கொண்டு வர பாஜக முன் நின்று அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் எனவும், அந்த நவோதயா பள்ளியின் பெயரையும் கர்மவீரர் காமராஜர் பெயரில் கொண்டு வந்து ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கும் இதற்கு தமிழக அரசு மற்றும் திமுக அரசு அனுமதி வழங்குமா? நேரடியாக சவால் விடுகிறேன்" என அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக ஆர்ப்பாட்டம்

திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் தமிழக பாஜக தலைவர் அறிவித்துள்ளார். தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் சாதனை

காமராஜர் சாதனை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் காமராஜர் கல்விக்காக ஆற்றிய பணிகள் ஏராளம். ஏராளமான பள்ளிக்கூடங்களை நிறுவியது முதல், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் கல்வி கற்போர் விகிதத்தை உயர்த்தியது காமராஜரின் சாதனை. இந்நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும், காமராஜர் பெயரில் நவோதயா பள்ளிகளை திறக்கத் தயார், அதற்கு திமுக அனுமதி வழங்குமா எனக் கேட்டிருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை அரசியல்

அண்ணாமலை அரசியல்

திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சியை விமர்சிக்க, காமராஜர் ஆட்சியை புகழ்ந்து வரும் பாஜக, தற்போது காமராஜர் பெயரிலேயே திட்டம் கொண்டு வரத் தயார் என்று கூறியிருப்பது காங்கிரஸ், திமுக வட்டாரங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. காமராஜரை திமுகவுக்கு எதிரான பிம்பமாக பாஜகவின் அண்ணாமலை முன்னிறுத்தி அரசியல் செய்ய முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+