டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக, காங்... அனைத்து கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியாக விரும்பும் சரத்பவார்- பம்பரமாய் சுழலும் பி.கே.?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அடுத்த ஜனாதிபதியாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி குடும்பத்துடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்கின்றன தகவல்கள்.

"3 நாள் அவகாசம்".. பிரஷாந்த் கிஷோரை காங்கிரசில் இணைய அழைத்த ராகுல்?.. மிக உயரிய பொறுப்பு ரெடியா!?

நாட்டின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத்பவார்.

சோனியா, ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசித்த 3 விஷயங்கள்... பரபரக்கும் தேசிய அரசியல்! சோனியா, ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசித்த 3 விஷயங்கள்... பரபரக்கும் தேசிய அரசியல்!

சரத்பவாரைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கிறார். மகாராஷ்டிராவிலும் பாஜகவுக்கு எதிராக சிவேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆட்சியில் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தலைமையா? சரத்பவார் திட்டவடட்ட மறுப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? 2024 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தலைமையா? சரத்பவார் திட்டவடட்ட மறுப்பு

அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு

அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு

அதேநேரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சரத்பவார் சந்தித்தார் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எல்லா விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது என பூடகமாக கூறினார். ஆனால் சரத்பவார் இதுபற்றி பேசுவதற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பி.கே. ஆலோசனை- எதிர்க்கட்சிகள் கூட்டம்

பி.கே. ஆலோசனை- எதிர்க்கட்சிகள் கூட்டம்

இதன்பின்னர் மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சியில் சலசலப்புகள் இடைவிடாமல் எழுந்து கொண்டே இருக்கின்றன. ஒருகட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோர் திடீரென சரத்பவாரை 2 முறை சந்தித்தார். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் சரத்பவார், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி பரபரப்பை கிளப்பினார். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை ஒதுக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

சோனியா குடும்பத்துடன் பி.கே. ஆலோசனை

சோனியா குடும்பத்துடன் பி.கே. ஆலோசனை


இந்த சூழலில் சோனியா காந்தி குடும்பத்தை பிரசாந்த் கிஷோர் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு பஞ்சாப், உ,.பி. சட்டசபை தேர்தல் வியூகத்துக்கானதுதான் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஆலோசனையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதில் சரத்பவார், ஜனாதிபதியாவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத்பவாரின் திட்டம் இதுதானா?

சரத்பவாரின் திட்டம் இதுதானா?

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தாம் ஜனாதிபதியாக வேண்டும் என விரும்புகிறாராம் சரத்பவார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை என அடுத்தடுத்து காய்களை நகர்த்தினாராம் சரத்பவார். இதன் தொடர்ச்சிதான் சோனியா குடும்பத்துடனான பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என கூறப்படுகிறது.

English summary
Sources said that NCP Chief Sharad Pawar wants to become the next President of India with Prashant Kishor lobbying.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X