இந்தியாவில் அதிக தற்கொலை.. தமிழ்நாட்டுக்கு 2வது இடம்.. எவ்வளவு பேர் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் 2021ம் ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் அதிக பேர் தற்கொலை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான விபரங்களை மாநிலம் வாரியாக தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 2021-2022ம் ஆண்டுக்கான விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த 2020-2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 2021-2022ம் ஆண்டில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிக தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தற்கொலை எவ்வளவு?
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவலின்படி இந்தியாவில் கடந்த 2021-2022 ஆண்டில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த 2020-21ம் ஆண்டை ஒப்பிடும்போது 7.2 சதவீதம் அதிகமாகும். ஏனென்றால் 2020-21ல் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு 2வது இடம்
மாநிலங்களை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 22 ஆயிரத்து 207 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 13.5 சதவீதமாகும். இதற்கு அடுத்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 11.5 சதவீதமாகும். தமிழ்நாட்டை தொடர்ந்து 14 ஆயிரத்து 965 தற்கொலைகளுடன் மத்திய பிரதேசம் 3வது இடத்தில் உள்ளது. 13 ஆயிரத்து 500 தற்கொலைகளுடன் 4வது இடத்தில் மேற்கு வங்கமும், 13 ஆயிரத்து 56 தற்கொலைகளுடன் 5வது இடத்தில் கர்நாடகா உள்ளது.

உத்தர பிரதேசத்தில் குறைவு
இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் இந்த 5 மாநிலங்களில் மட்டும் தான் 50.4 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன. மற்ற 23 மாநிலங்களில் 49.6 சதவீத தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் வெறும் 3.5 சதவீத தற்கொலை பதிவாகி உள்ளது.

புதுச்சேரிக்கு 2வது இடம்
தற்கொலையில் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் டெல்லி முதலிடத்தையும், புதுச்சேரி 2வது இடத்தையும் பிடித்துள்ளன.டெல்லியில் மொத்தம் 2,810 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் புதுச்சேரியில் 504 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைகளுக்கு ஏராளமான காரணங்கள் கூறப்படுகின்றன. தொழில் பிரச்சனை, குடும்ப பிரச்சனை, பணப்பிரச்சனை, தனிமை, மனஅழுத்தம் உள்பட வெவ்வேறு காரணங்களால் ஒருவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications