டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எங்கு அதிகம்.. அதிர்ச்சி தரும் மாநிலங்கள்.. முழு விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டில் தினமும் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 46 பலாத்கார வழக்குகள் வந்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றங்களின் விகிதம் 2019ல் 7.2 சதவீதமாக இருந்த நிலையில் 2020ல் 6.7 சதவீதமாக சரிந்துள்ளது.

ஆண்டுதோறும் நாட்டின் குற்ற வழக்குகள் தொடர்பாசு தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிடும். அந்த வகை யில், கடந்த 2020ம் ஆண்டுக்கான குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020ல் நாடு முழுவதும் மொத்தம் 28,046 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 28 ஆயிரத்து 153 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . தினசரி 77 பலாத்கார வழக்கு என்ற விகிதத்தில் கடந்தாண்டு பதிவாகியுள்ளது . இதில் பாதிக்கப்பட்டவர்களில் 25,498 பேர் 18 வயதை தாண்டியவர்கள், 2,655 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறுமிகள் ஆவர்.

திமுக சங்கியாகிவிட்டதா என்ன?.. வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ட்வீட்! திமுக சங்கியாகிவிட்டதா என்ன?.. வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ட்வீட்!

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5.310 வழக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரப் பிரதேசம் (2,769), மத்திய பிரதேசம் (2,339), மகாராஷ்டிரா (2.061) மற்றும் அசாம் (1,657) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறைந்தபட்சமாகடெல்லியில் 997 வழக்குகள் பதிவாகி உள்ளன.கணவர் மற்றும் புகுந்த வீட்டாரால் கொடுமைப்படுத் தப்பட்ட வழக்குகள் மட்டுமே 1 லட்சத்து 11 ஆயிரத்து 549 ஆகும்.

வரதட்சணை

வரதட்சணை

பலாத்காரம் தவிர, பெண் களுக்கு எதிரான அடக்குமுறை, தாக்குதல் பிரிவில் 85,392 வழக்கும், பலாத்கார முயற்சி என 3741 வழக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 105 வழக்கில் வெளிநாடுகளில் தாக்கப்பட்டது தொடர்பானது. பெண் கடத்தல் மற்றும் அடைத்து வைத்து சித்ரவதை செய்த வழக்கில் 62 ஆயிரத்து 300 ஆகும். வரதட்சனை இறந்ததாக 6966 வழக்குகள் பதிவாகி உள்ளன . இதில் 7 ஆயிரத்து 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்கொடுமைகள்

வன்கொடுமைகள்

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன . அதேசமயம் இந்த ஊரடங்கால் முந்தைய ஆண்டைவிட குற்றங்கள் சற்று குறைந்துள்ளன.

எவ்வளவு குற்றங்கள்

எவ்வளவு குற்றங்கள்

பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டில் மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுவே கடந்த 2019ம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 326 வழக்கும், 2018ல் 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்கும் பதிவாகி உள்ளன. பலாத்கார வழக்குகள் 2020ஐ விட 2019ல் அதிகமாக 32,033 ஆகவும், 2018ல் 33,356 ஆகவும், 2017ல் 32,559 ஆகவும் பதிவாகி உள்ளன.

குற்றங்கள் விகிதம்

குற்றங்கள் விகிதம்

கடந்த ஆண்டில் 29,193 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, கடந்த 2019ஐ விட 1 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ல் 28,915 பேர் கொலை செய்யப்பட் டுள்ளனர். மொத்தம் 88,590 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதில், 14,869 பேர் ஆண்கள், 73,721 பேர் பெண்கள். 56,591 பேர் சிறார்கள் ஆவர். இதில் 47,876 பேர் சிறுமிகள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என 1 லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2019ஐ காட்டிலும் (1 லட்சத்து 48 ஆயிரத்து 90) குறைவாகும். குற்றங்களின் விகிதம் 2019ல் 7.2 சதவீதமாக இருந்த நிலையில் 2020ல் 6.7 சதவீதமாக சரிந்துள்ளது.

டெல்லி முதலிடம்

டெல்லி முதலிடம்

இந்தியாவின் 19 பெருநகரங்களில், குற்றவிகிதங்களை பார்த்தால் டெல்லியில் தான் நாட்டிலேயே அதிகமாகபெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு 9782 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. , மும்பை (4,583), பெங்களூரு (2730) மற்றும் லக்னோ (2636)ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ராஜஸ்தான் முதலிடம்

ராஜஸ்தான் முதலிடம்

NCRB தரவுகளின்படி, ராஜஸ்தான் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் பலாத்கார வழக்குகள் (5310) பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 2769 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2339 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 2061 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

எவ்வளவு அதிகம்

எவ்வளவு அதிகம்

2019 ஐ ஒப்பிடும் போது 2020 இல் பட்டியல் இன சாதியினருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 9.4% அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் 45,961 ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 2020 ல் 50,291 அதிகரித்துள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

கூட்டு பாலியல் வன்கொடுமை

நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் மிக அதிகபட்சமாக டெல்லியில் குற்றம் நடந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் போது 2020ல் குறைந்து இருந்தாலும், கொடூரமாக குற்றங்கள் தொடர்வது டெல்லியில்தான் அதிகமாக உள்ளது. 2012ல் நிர்யா என்ற மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு அதேபோன்ற ஒரு கொடூரம் டெல்லி பெண் காவலர் சபியாவிற்கு நடந்துள்ளது. நேர்மையாக பெண் காவலர் என பெயர் எடுத்த சபியா மர்மமான முறையில் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுடன், மார்பகங்கள் அறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது . நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண் காவலருக்கு நடந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதனிடையே தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்பது குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தமிழகத்தில் அதிகபட்ச குற்றப்பதிவே சென்னையில் தான் நடந்திருக்கிறது. சென்னையில் கடந்த ஆண்டு 576 குற்றங்கள் நடந்துள்ளது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது குறைவு ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் வெறும் 97 குற்றங்கள் தான் நடந்துள்ளது. பெரும்பாலான குற்றங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

English summary
As per the NCRB data, Rajasthan reported the highest number of rapes (5310) in India in 2020, followed by Uttar Pradesh with 2769 cases, Madhya Pradesh (2339 cases), and Maharashtra (2061 cases).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X