டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு முடிவுகள் ஒத்தி வைப்பு...நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருந்த நிலையில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 15,97,433 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 90 சதவீதம் பேர் நீட் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்து இருந்தது.

NEET Results 2020: How to Check Neet Cut Off Marks and procedure to download the mark sheets

இந்த நிலையில் தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இருந்த உச்ச நீதிமன்றம், ''தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

NEET Results 2020: How to Check Neet Cut Off Marks and procedure to download the mark sheets

இதையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேர்வு எழுதியவர்களில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமாகவும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு 40 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

NEET Results 2020: How to Check Neet Cut Off Marks and procedure to download the mark sheets

மருத்துவ படிப்பை வெளிநாடுகளில் தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். நீட் தேர்வு-2020 'கட்-ஆப்' மதிப்பெண் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை, மொத்த காலியிடங்கள், வினாத்தாளின் கடினம், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்-ஆப் சதவீதமும், மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வேறுபடும். கடந்தாண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 701-134, எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி.,பிரிவினருக்கு, 133-107 கட்-ஆப் மதிப்பெண்களாக இருந்தன.

NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம் NEET Exam 2020: நீட் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ல் தேர்வு நடத்துங்கள் - உச்ச நீதிமன்றம்

கூடுதலாக, நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சத வீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தேர்வு நடந்து இருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

English summary
NEET result 2020: How to check cut offs, where to check, download
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X