டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 3ஆம் அலை.. டெல்டா + அதிவேகமாக பரவலாம்.. உடனடி ஆக்ஷன் தேவை.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனாவை விட புதிதாகக் கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ் கொரோனா வகை வேகமாகப் பரவலாம் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    புதிய Lambda Corona பற்றி தெரியுமா? 29 நாடுகளுக்கு பரவிய New Variant | OneIndia Tamil

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது.

    இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரசே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த டெல்டா வகை கொரோனா தற்போது மேலும் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வகையாக மாறியுள்ளது.

    வூஹான் மையம் - கொரோனா தோற்றம்.. அதிமுக்கிய ஆவணத்தை பைடன் அரசுக்கு கொடுத்த சீன அமைச்சர்..அடுத்து என்னவூஹான் மையம் - கொரோனா தோற்றம்.. அதிமுக்கிய ஆவணத்தை பைடன் அரசுக்கு கொடுத்த சீன அமைச்சர்..அடுத்து என்ன

     டெல்டா ப்ளஸ்

    டெல்டா ப்ளஸ்

    இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், டெல்டா வகை உருமாறிய கொரோனாவை போலவேதான் டெல்டா ப்ளஸ் உருமாறிய கொரோனாவும் உள்ளது. ஆனால் இதன் பிறழ்வு சிறிதளவு மாறியுள்ளது. இந்த புதிய பிறழ்வு கொரோனா பரவல் வேகத்தை அதிகப்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, இது குறித்து உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், தற்போது வரை இந்த வகை கொரோனா கேஸ்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன.

     உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா வகை என்று பட்டியலிட்டுள்ளது. ஆனால், இது கவலையளிக்கும் கொரோனா வகையாக மாறும் ஆபத்தும் உள்ளது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வகையாக இது மாறுமா இல்லையா என்பது குறித்து நாம் அடுத்த சில வாரங்கள் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

     சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது

    சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது

    டெல்டா கொரோனா வகை மனித செல்களை அதிகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் வேக்சின் எஸ்கேப் ஆற்றல் கொண்ட K417N பிறழ்வும் சேர்ந்து தான் டெல்டா ப்ளஸ் கொரோனாவை உருவாக்குகிறது. இந்த வைரஸை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிக மக்களைப் பாதிக்கும் வகையில் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து தன்னை தானே உருமாற்றிக் கொள்கிறது. எனவே, இந்த வைரஸை ஒழிக்க நமக்கு ஆக்ரோஷமான நடவடிக்கைகள் தேவை.

     பிரிட்டன் உணர்த்துவது என்ன

    பிரிட்டன் உணர்த்துவது என்ன

    பிரிட்டன் இதனை மிகச் சிறப்பாகக் கையாண்டது. ஆல்பா வகை கொரோனாவால் பல மாதங்கள் அவர்கள் ஊரடங்கை அறிவித்திருந்தனர். கொரோனா குறைந்ததைத் தொடர்ந்து தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கினர். மீண்டும் இப்போது அங்கு டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இது நமக்கு ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது. நாம் வெகு ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் சில மாதங்களில் மீண்டும் ஒரு அலை கண்டிப்பாக ஏற்படும்.

     உருமாறிய கொரோனா

    உருமாறிய கொரோனா

    இந்த வைரஸ் தொடர்ந்து தன்னை தானே மாற்றிக் கொள்கிறது. இதுவும் ஒரு பெரிய சிக்கல். நாம் அதிகளவில் genome sequencingஐ செய்ய வேண்டும். அப்போது தான் உருமாறிய கொரோவின் தாக்கம் எப்படி உள்ளது, கொரோனா புதிதாக உருமாறிய உள்ளதா என்பவை குறித்து நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அடுத்து வரும் காலங்களில் நாம் இதற்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்" என்றார்.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா வகை முதலில் கடந்த மார்ச் மாதம் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது வரை குறைவானவர்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை என நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார்.

    English summary
    AIIMS Chief Dr Randeep Guleria, says Delta Plus variant may become a "variant of concern". Delta Plus was first found in India in March 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X