டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறி... 17 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐ ஏ) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இங்கு அல் ஹிந்த் எந்த பெயரில் செயல்பட்டு வந்ததாக புலனாய்வில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான விசாரணை 2017ல் இருந்து நடந்து வருகிறது. காஜா மொஹிதீன் என்பவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஜா பஹ்ருதீன், காஜா மொஹிதீன் இருவரும் கடலூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 2014ல் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து இருப்பதாக புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

NIA has filed chargesheet against 17 IS suspects from Karnataka and Tamil Nadu

அல் ஹிந்த் அமைப்பை இந்தியாவில் அமைத்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த மெஹ்பூப் பாஷா மற்றும் மொய்தீன் என்பது தெரிய வந்துள்ளது. இந்து தலைவர்கள் மற்றும் அவர்களது அலுவலகத்தில் தாக்குதல் நடத்துவதுதான் இந்த அமைப்பின் நோக்கம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் 14 இடங்களில் பிப்ரவரி 24ல் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொண்டு இருந்தது. அப்போது, இந்த அமைப்பு இந்து தலைவர்களை கொல்வதற்கும், பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்படுத்துவதற்கும் சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பினர் கூடி, ஆயுதங்கள் வாங்கி குவிப்பது, ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளை பரப்புவது, தங்களது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பல்வேறு ஆயுதங்கள் வாங்குவது என்று முடிவு செய்து இருந்ததாக என்ஐஏ தெரிவித்து உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த மெஹ்பூபா பாஷா, காஜா மொஹிதீன், சாதிக் பாட்ஷா ஆகியோர் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளை பரப்பி வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பாஷா, மொஹிதீன் இருவரும் இளைஞர்களை பணிக்கு அமர்த்தியது, வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான மூலக்கூறு பொருட்களை சேகரித்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது என்ஐஏ தெரிவிதுள்ளது.

அண்ணா நகர்.. எம்.ஜி.ஆர். நகர்.. வரிசையில்... எடப்பாடியார் நகர்... பெருந்துறையில் பெயர் சூட்டல்அண்ணா நகர்.. எம்.ஜி.ஆர். நகர்.. வரிசையில்... எடப்பாடியார் நகர்... பெருந்துறையில் பெயர் சூட்டல்

இவர்கள் வனப்பகுதியில் பயிற்சி மேற்கொள்வதற்கான பொருட்களையும் வாங்கியுள்ளனர். குண்டல்பேட்டில் சிவனாசமுத்திரத்தில் பயிற்சி அளிக்கவும் இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் சமத், தவ்பீக், சையத் அலி நவாஸ், ஜஃபர் அலி, அப்துல் ஷமீம் மீதும் கர்நாடகாவைச் சேர்ந்த இம்ரான் கான், முகம்மது ஹனீப் கான், முகம்மது மன்சூர் அலி கான், சலீம் கான், ஹூசைன் ஷரிப், இஜாஸ் பாஷா, ஜபியுல்லா, சையத் பசியுர் ரஹ்மான், முகம்மது சைத் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
NIA has filed chargesheet against 17 IS suspects from Karnataka and Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X