கொரோனா:ஆக்ஸிஜன் சிகிச்சைக்கும், கறுப்பு பூஞ்சைக்கும் தொடர்பில்லை: எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவுக்கான ஆக்சிஜன் சிகிச்சைக்கும் கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை; மியூகோர்மைகோசிஸ் பற்றி பேசும்போது, கறுப்பு பூஞ்சை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மியூகோர்மைகோசிஸ் பற்றி பேசும்போது, கறுப்பு பூஞ்சை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இதன் மூலம் பல குழப்பங்களை தவிர்க்க முடியும்.

 கறுப்பு பூஞ்சை பெயர் ஏன்?

கறுப்பு பூஞ்சை பெயர் ஏன்?

கறுப்பு பூஞ்சை என்பது மற்றொரு வகையைச் சேர்ந்தது. வெள்ளை பூஞ்சை பகுதியில், கரும்புள்ளிகள் ஏற்பட்டதன் காரணமாக, மியூகோர்மைகோசிஸ் கருப்பு பூஞ்சையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கேண்டிடா என்ற பூஞ்சை தொற்று வாய், வாயின் உட்பகுதி மற்றும் நாக்கில் வெள்ளை திட்டுகளாக காணப்படும். பிறப்புறப்புகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

 மியூகோர்மைகோசிஸ்

மியூகோர்மைகோசிஸ்

பாதிப்பு மோசமானால் ரத்தத்தில் காணப்படும். அரிதாக ஏற்படும் அஸ்பெர்கிலோசிஸ், நுரையீரலுக்குள் ஊடுருவி குழியை ஏற்படுத்தும். ஆனால் கொரோனா பாதித்தவர்களுக்கு பெரும்பாலும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்புதான் ஏற்படுகிறது. அஸ்பெர்கிலோசிஸ் அரிதாக காணப்படுகிறது. சிலருக்கு கேண்டிடா ஏற்படுகிறது.

 நீரிழிவு பாதிப்பு, ஸ்டீராய்டு மருந்து

நீரிழிவு பாதிப்பு, ஸ்டீராய்டு மருந்து

மியூகோமைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் நீரிழிவு நோயுடையவர்கள் அல்லது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டவர்கள். மற்வர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 'ஆக்ஸிஜன் சிகிச்சை எடுக்காமல், வீட்டில் சிகிச்சை பெற்ற பலருக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆக்ஸிஜன் சிகிச்சைக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கும் உறுதியான தொடர்பு இல்லை.

 ஆக்சிஜன் செறிவூட்டிகளில் ஈரப்பதம்

ஆக்சிஜன் செறிவூட்டிகளில் ஈரப்பதம்

நீரிழிவு நோயாளிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால் முறையான சுகாதாரத்தை பின்பற்றுவது மிக முக்கியம். ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்துபவர்கள், ஈரப்பதமூட்டிகள் சீரான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+