இந்தியா கோரிக்கை விடுத்தும்.. சுமி நகரில் மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி தரவில்லை: ஐ.நா.வுக்கான தூதர்
டெல்லி: ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் உக்ரைனில் உள்ள சுமி நகரில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்கள் தங்க எந்த பாதுகாப்பான இடமும் ஒதுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமூர்த்தி, தாக்குதல் நடைபெற்று வரும் இடங்களில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் உக்ரைன் மக்கள் தப்பிச்செல்ல பாதுகாப்பான வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

போரை நிறுத்திவிட்டு சுமூகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இரு நாடுகளையும் இந்தியா வலியுறுத்தி வரும் வேளையில், உக்ரைனின் சுமி நகரிலுள்ள உள்ள இந்திய மாணவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்தித் தராதது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை பாரபட்சம் இன்றி நடுநிலையோடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட திருமூர்த்தி, பாதிக்கப்பட்ட மக்களை சுதந்திரமாக வழிநடத்த வேண்டும் என்றார்.
உக்ரைனில் சிக்கித் தவித்த 20,000 இந்திய மாணவர்களை தாய்நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்த அவர், பிற நாட்டு குடிமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கும் இந்தியா உதவி புரிந்ததை சுட்டிக் காட்டினார். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவையான மருந்துகள், கூடாரங்கள், தண்ணீர் சேமிப்பு டேங்குகள் போன்ற பல்வேறு நிவாரண பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. தற்போதைய சூழலில் உக்ரைனுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை என்பதை கண்டறிந்து செய்து வருகிறோம். இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இருநாடுகளும் அனைத்து விதமான பகை உணர்வுகளையும் கைவிட்டு அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி போரை கைவிடுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய திருமூர்த்தி, சில மணி நேரங்களுக்கு முன்பாககூட பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் மற்றும் ரஷியா தலைவர்களுடன் பேசி அமைதிக்கு திரும்ப வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி மற்றும் ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் உக்ரைனின் சுமி நகரில் சிக்கி இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications