டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர் , முத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.

இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள்.

புதிய சட்டம்

புதிய சட்டம்

திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்லும் மகன்கள் பெற்றோரை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். இதையடுத்து அந்த சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . இதன்படி மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகன் மற்றும் மருமகள்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பெற்றோர் பராமரிப்பு

பெற்றோர் பராமரிப்பு

'பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் திருத்த மசோதா 2019' சட்டத்தை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசி யஅமைச்சர் தவார் சந்த் கெலாட், தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியவரை துன்பறுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மனரீதியாக காயம்

மனரீதியாக காயம்

பெற்றோரை திட்டுதல், பணம் தராமல் துன்புறுத்துதல், காயம் ஏற்படுத்துதல், உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பெற்றோரை கைவிடுதல் போன்ற வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றங்களை செய்யும் மகன்கள் அல்லது மக்கள்மட்டுமின்றி இனி மருமகள்கள், மருமகன்கள், பேரன் மற்றும் பேத்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புகார் தரலாம்

புகார் தரலாம்

இந்த புதிய சட்டப்படி 80வயதுக்கும் மேற்பட்ட முதியோர் அல்லது பெற்றோர் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற தீர்ப்பாயத்தை நாடி புகார் தெரிவிக்கலாம். இந்த தீர்ப்பாயம் புகார்களை 60 நாளில் விசாரித்து தீர்வு தரும்.80 வயதுக்கு கீழ் என்றால் 90 நாளில் விசாரித்த தீர்வுதரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோருக்கான சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்படும். டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரி இதன் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படுவார் என்றார்.

English summary
the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2019 — it now includes sons-in-law and daughters-in-law within the ambit of caregivers to elderly people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X