டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அச்சுறுத்தும் ஓமிக்ரான் கேஸ்கள்.. கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நோ சொன்ன டெல்லி அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமிக்ரான் கேஸ்கள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமை கையைவிட்டுப் போவதைத் தடுக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஓமைக்ரான் பரவல்… இரவு நேர ஊரடங்கு அவசியம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!

    ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்கா. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்த கொரோனா அலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஓமிக்ரான் கொரோனா மற்ற வகைகளை விட வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதால் அதைக் கருத்தில் கொண்டும் உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன,

    ஓமிக்ரான் வைரசால் 3 நாடுகளில் மரணம் பதிவாகியுள்ளது.. அலார்ட்டா இருக்கனும்.. நிபுணர்கள் எச்சரிக்கைஓமிக்ரான் வைரசால் 3 நாடுகளில் மரணம் பதிவாகியுள்ளது.. அலார்ட்டா இருக்கனும்.. நிபுணர்கள் எச்சரிக்கை

     இந்தியாவில் ஓமிக்ரான்

    இந்தியாவில் ஓமிக்ரான்

    இந்தியாவில் முதலில் கர்நாடக தலைநகர் பெங்களுரிவில் இருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அதன் பிறகு குஜராத், டெல்லி என நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. இதுவரை நாட்டில் 213 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் மட்டும் 57 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் காரணமாக ஏற்கனவே பல்வேறு மாநிலங்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

     புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

    இந்நிலையில் தலைநகர் டெல்லியிலும் ஓமிக்ரான் அச்சம் காரணமாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கலாசார நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. வணிக வாளாகங்கள் மற்றும் பணியிடங்களில் மாஸ்க் அணியாமல் இருக்கும் நபர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,

     டெல்லி

    டெல்லி

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறைக்கும் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி கொரோனா கேஸ்கள் தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்கவே இப்போதே அரசு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

     வார் ரூம்கள்

    வார் ரூம்கள்

    இந்தச் சூழலில் ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை விட மூன்று மடங்கு வேகமாகப் பரவுகிறது என்றும் ஓமிக்ரான் கொரோனை கட்டுப்படுத்த வார் ரூம்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தீவிர கொரோனா பரிசோதனை, இரவு ஊரடங்கு உள்ளிட்ட தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், "உள்ளூரில் இருக்கும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும். ஒரு வாரத்தில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதம் மேல் இருந்தால் அல்லது ஆக்ஸிஜன் & ஐசியு படுக்கைகளில் 40 சதவீதம் மேல் நிரம்பினால் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கலாம். இந்த நிலையை அடையும் முன்னரே மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

     உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரசை உலக சுகாதார அமைப்பு, கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த கொரோனா வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்குமாறு ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    As Omicron cases steadily rises, Delhi government banned all gatherings to celebrate Christmas and New Year. All cultural events and other gatherings have been prohibited in delhi5
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X