ஓமிக்ரான் வைரஸ்: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா?.. அப்போ ஈசியாக எடுத்து கொள்ளாதீங்க!
டெல்லி: உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் புதிது, புதிதாக உருமாறி வருவதால் உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.
இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா ஆதிக்கம் சற்று குறைந்தாலும் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

ஓமிக்ரான் வைரஸ் ஆபத்து
ஓமிக்ரான் வைரஸ் மிகவும் லேசானவை என்று ஒருபக்கம் பலர் கூறி வந்தாலும், இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸை விட வீரியம்மிக்கது என்று மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது. குறிப்பாக இந்த ஓமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகம் தாக்கி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு
ஏற்கனவே டெல்டா வைரஸ் மாறுபாட்டில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், ஓமிக்ரான் வைரசால் குழந்தைகள் பாதிப்படைவது மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு சில குழந்தைகளிடம் காணப்படும் தீவிரமான பாதிப்பு அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
ஒமிக்ரான் பாதிப்புகள் இந்தியாவில் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் குழந்தைகளில் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருக்கா?
அதாவது குழந்தைகளிடம் சோர்வு, தலைவலி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக முன்கூட்டியே பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஒமிக்ரான் வைரஸ் நுரையீரலில் மட்டுமல்ல, பல உறுப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேற்கண்ட அறிகுறிகள் தவிர வயிற்றில் வலி மற்றும் உடலில் சொறி போன்ற அறிகுறிகளும் எச்சரிக்கையை உணர்த்துபவையாகும்.
Recommended Video

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
அனைத்து குழந்தைகளிடமும் இந்த அறிகுறிகள் காணப்படுவதில்லை. ஆனால் ஒமிக்ரான் அறிகுறிகளில் முக்கிய அறிகுறியாக வறண்ட இருமல் குழந்தைகளிடையே பொதுவாக காணப்படுகிறது. கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு மாஸ்க் அணிதல், சானிடைசர் உபயோகித்தல் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதே வேளையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது மிகவும் பயன்தரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications