டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூன் 1 முதல் அறிமுகம்.. 'ஒரே நாடு ஒரே கார்டு..' புது ரேஷன் கார்டு தேவையில்லை.. அறிவித்தார் அமைச்சர்

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், ஜூன் 1 முதல் நாடு முழுக்க செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ராஜ்யசபாவின், கேள்வி நேரத்தின்போது, துணை கேள்வி ஒன்றுக்கு, பதிலளித்தபோது, ​​வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெற 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' வழங்கப்படும் என்று கூறினார். இந்த திட்டம் ஜூன் 1 முதல் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் தற்போது 12 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.

One nation-One ration card from June 1

2013 ஆம் ஆண்டில் 11 மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், அனைத்து மாநிலங்களும் அதன் எல்லைக்குள் வந்துள்ளன.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு புதிய ரேஷன் கார்டு, தேவையில்லை. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டே தொடரும். எனவே, புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்பது வதந்தி. ஜூன் 1 முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வரும் என்றாலும், வடகிழக்கு மாநிலங்களுக்கு, மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசுபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு

ரேஷன் கார்டுகளை ஆதார் உடன் இணைப்பதும் கட்டாயமாக இருப்பதால், வடகிழக்கு மாநிலங்கள் இந்த காலக்கெடுவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

English summary
'One Nation-One Ration Card' scheme will be implemented across the country from June 1, Food and Civil Supply Minister Ram Vilas Paswan said in the Rajya Sabha on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X