ஆப்டிகல் இல்யூஷன்: "மாம்பழங்களுக்கு இடையே அழகான கிளி".. உங்க கண்ணுக்கு தெரிகிறதா?
டெல்லி: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சுவையான மாம்பழங்களுக்கு மத்தியில் ஒரு அழகான கிளி ஒன்றும் இருக்கிறது. 5 செகண்டுக்குள் இந்த கிளியை கண்டுபிடித்தால் நீங்க புத்திசாலி தான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக ஒரு பொருளை பார்க்கும் போது அந்த பொருளில் இருப்பது நம் கண்களுக்கு நேரடியாக தெரியாமல் கண்களை குழப்பமடைய செய்வதே ஆகும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணல் நீரை குறிப்பிடலாம். முதலில் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாலையில் தண்ணீர் இருப்பது போல் தோன்றும்.

இல்யூஷன் படங்கள்
ஆனால் அருகில் சென்று பார்த்தால் அங்கு தண்ணீர் இருக்காது. இதைப்போல தான் ஆப்டிகல் இல்யூசன் படங்களும் முதலில் நம் கண்களுக்கு ஒருவித தோற்றத்தினையும்.. சற்று ஆழ்ந்து பார்க்கும் போது வேறுவித தோற்றத்தையும் காண்பிக்கும். இப்படி பார்க்கும் நம் கண்களை குழப்பமடைய செய்து மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் பலரும் தங்களது ஓய்வு நேரங்களில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

அழகான கிளி
இப்படி ஓய்வு நேரங்களில் கூட அறிவுக்கு வேலை கொடுக்கும் வகையில் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருந்து வருவதால், இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் மாம்பழங்கள் குவியலாக கிடக்கிறது. இந்த மாம்பழ குவியலுக்கு மத்தியில் ஒரு அழகான கிளியும் இருக்கிறது.

5 செகண்ட் மட்டுமே டைம்
இந்த கிளியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.. மேலோட்டமாக பார்க்கும் போது மாம்பழம் மட்டும் தானே இருக்கிறது என்று சொல்ல தோன்றும்.. ஆனால் சற்று உற்று பார்த்தல் கிளி இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.. அதற்காக இந்த படத்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்க தேவையில்லை.. கிளியை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்பதால் 5 செகண்ட் மட்டுமே டைம் கொடுக்கப்படுகிறது.

மாம்பழங்களுக்கு மத்தியில் கிளி
குறிப்பிட்ட 5 செகண்டுக்குள் நீங்கள் மாம்பழங்களுக்கு மத்தியில் இருக்கும் கிளியை கண்டுபிடிக்க வேண்டும். சரி ஒகே.. டைம் ஸ்டார்ட்ஸ் நவ்... 1..2..3..4..5... டைம் ஓவர்.. உங்களால் கிளியை கண்டுபிடிக்க முடிந்ததா.. கொடுக்கப்பட்ட 5 செகண்டிற்குள் நீங்கள் கிளியை கண்டுபிடித்தீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்க கிரேட் தான்.. அதிக கவனிப்பு திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள்.. எளிதில் எதையும் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்....

கண்களை மட்டும் மனதில் வைத்து
ஆனால் 5 செகண்டுக்கள் ஆகியும் என் கண்களுக்கு கிளி தெரியவில்லையே என்று கூறுபவர்கள் மீண்டும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு உற்று கவனியுங்கள்.. கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம். சரி அப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு டிப்ஸ்... அது என்னவென்றால் கிளியின் கண்களை மட்டும் மனதில் வைத்து தேடினால் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம்.

படத்தின் இடப்புறம் செண்டரில்
சரி இப்போது கிளி படத்தில் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.. கண்டுபிடித்திருந்தீர்கள் என்றால் சூப்பர்.. ஆனால் இப்போதும் கிளி கண்களுக்கு தெரியவில்லையே என்றால்.. படத்தின் இடப்புறம் செண்டரில் மட்டும் உற்று பாருங்கள்... அழகான கிளி இருப்பதை காணலாம். மேலே உள்ள படத்திலும் கிளி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications