ஹலோ 'ஜீ' கொஞ்சம் இருங்க.. ஐஎம்எஃப் பாராட்டினது எங்களைதான்! ப.சிதம்பரம் தந்த பரபரப்பு விளக்கம்
டெல்லி: இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்தான் ஏழைகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது என்றும், ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இந்த திட்டம் சரியாக அமல்படுத்தவில்லை எனவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
அதேபோல, இந்தியா குறித்து ஐஎம்எஃப் பாராட்டியுள்ளது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஐஎம்எஃப் குறிப்பிட்டுள்ள அம்சங்களை பாஜகவுக்கு முன்னர் காங்கிரஸ்தான் செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா
சர்வதேச அளவில் ஏற்கெனவே நீடித்து வந்திருந்த பொருளாதார மந்தநிலையை கொரோனா பெருந்தொற்று தீவிரப்படுத்தியது. உலகின் மிக பலம் கொண்ட பொருளாதாரத்தை கொண்டிருக்கும் சீனா கூட இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இன்று வரையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் இந்தியா பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாராட்டு
இதன் தொடர்ச்சியாக ஐஎம்எஃப் இந்தியாவை பாராட்டியிருந்தது. அதாவது உலக நாடுகள் அனைத்தும் இருளில் இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் வெளிச்சம் உள்ளதாக ஐஎம்எஃப் கூறியிருந்தது. குறிப்பாக இந்தியாவில் உள்ள நேரடி பணமாற்ற முறை மக்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருப்பதாகவும், இந்த திட்டங்கள் குறித்து இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதுள்ளது என்றும் ஐஎம்எஃப் அமைப்பின் நிதி விவகாரத்துறையின் துணை இயக்குநர் பவ்லோ மோரோ கூறியுள்ளார்.

ஆதார்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, "அதேபோல இந்தியாவின் செயல்பாடுகள் மிகுந்த ஈர்ப்பை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் புதிய தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் சிக்கலான விவகாரங்கள் எளிதில் தீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆதார் திட்டம். இதன் மூலம் தனித்தனி அடையாள அமைப்பு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்று கூறியிருந்தார். இதனை குறிப்பிட்டு ப.சிதம்பரம் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் திட்டம்
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தியாவின் நேரடி பணப்பரிமாற்ற முறையையும், ஆதார் திட்டத்தையும் அற்புதம் என ஐஎம்எஃப் அதிகாரி பாராட்டியுள்ளார். இந்த பாராட்டை பாஜக பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இந்த திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தெரிந்து கொள்ளவும். ஆதார் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதியன்று தொடங்கப்பட்டது. அதேபோல மக்களுக்கான நேரடி பணப்பரிமாற்ற முறை 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியான புத்தாண்டு அன்று தொடங்கப்பட்டது.

100 வேலை
இரண்டுமே அப்போதைய காங்கிரஸ் (UPA) அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது." என்று கூறியுள்ளார். மேலும், "இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கான வருமானமாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (MGNREGS) இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த 2020-2021ம் ஆண்டில் இந்த வேலைக்கு விண்ணப்பித்த 40 சதவிகித குடும்பங்களுக்கு ஒரு நாள் கூட வேலை கிடைக்கவில்லை என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

டபுள் என்ஜின் அரசு
இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது அரசின் கடமை. இவ்வாறு இருக்கையில் கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் உள்ள டபுள் என்ஜின் அரசால் 39 சதவிகித குடும்பங்களுக்கு ஒரு நாள் கூட வேலையை வழங்க முடியவில்லை. கூட்டணி ஆட்சி இருந்த பீகார் மற்றும் மகாராஷ்டிராவிலும் இது நிலைதான் இருந்தது." என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு (2022-2023) தாக்கல் செய்த பட்ஜெட்டில் MGNREGS திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. கடந்த ஆண்டு ரூ.98,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் இந்த தொகையில் சுமார் 25.2% நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications