டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோனியா காந்தி "வாய்ஸ்" கொடுத்ததும் உடனே பணிந்த சிபிஎஸ்இ.. வினாத்தாள் சர்ச்சையில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துகள் சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இடம்பெற்றதற்கு லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

4 நாள் பிளான்.. திடீரென தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆளுநர் ரவி.. என்ன காரணம்? 4 நாள் பிளான்.. திடீரென தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆளுநர் ரவி.. என்ன காரணம்?

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் பெண்கள் சுதந்திரம் தொடர்பான ஒரு கட்டுரை கொடுக்கப்பட்டு அதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

.

வினாத்தாள் கருத்து என்ன?

வினாத்தாள் கருத்து என்ன?

அதாவது வீட்டில் பணியாளர்கள், குழந்தைகள் ஆகியோரிடத்தில் ஒழுக்கம் குறைவதற்கு பெண்களின் சுதந்திரம்தான் காரணம்- மனைவிகள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை பின்பற்றுவதில்லை. இளைஞர்கள் தாங்கள் விரும்பிய உலகில் வாழ நினைப்பதால் ஒழுக்க கேடு ஏற்படுகிறது என்பது உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இத்தகைய நச்சு கருத்துகள் இடம்பெற்றுள்ளதற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. லோக்சபாவில் சோனியா காந்தி இன்று இந்த பிரச்சனையை எழுப்பினார்.

லோக்சபாவில் சோனியா

லோக்சபாவில் சோனியா

அப்போது, இப்படியான ஒரு சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை உடனே சி.பி.எஸ்.இ. திரும்பப் பெற வேண்டும். இத்தகைய கருத்துகளுடன் வினாத்தாளை தயாரித்த சி.பி.எஸ்.இ நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சி.பி.எஸ்.இ-ன் இந்த வினாத்தாள் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பணிந்தது சிபிஎஸ்இ

பணிந்தது சிபிஎஸ்இ

இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றது குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்; இந்த வினாவுக்காக முழு மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்குவோம். ஆங்கிலப் பாடத்திட்டத்துக்கான வல்லுநர்களின் குழுவை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

English summary
Congress Interim President Sonia Gandhi has condemned CBSE Question passage against Women in the Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X