டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 14வது நாள்: இன்று அவையில் தாக்கலாகும் மசோதாக்களின் விவரங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. லக்கிம்பூர் விபத்தை காரணம் காட்டி மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நேற்று அவையில் போராட்டத்தில் ஈடுப்பட்டன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று அவையில் அமளியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய போராட்டம், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட், ஓமிக்ரான் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவையில் கடந்த இரண்டு வாரமாக அமளி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் அவையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்த பிரச்சனை எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Parliament today: All you need to know about the 14th day of the Winter Session

இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் என்னன்னே மசோதாக்கள் நடக்கும், என்ன வாதங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.

மக்களவை

இன்று மக்களவையில் தேசிய அளவிலான ஊக்கமருந்து தடுப்பு அமைப்பை உருவாக்கும் மசோதா அமைச்சர் அனுராக் தாக்கூர் மூலம் உருவாக்கப்பட உள்ளது.

அதேபோல் மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ் மூலம் காட்டு விலங்குகள் பாதுகாப்பு மசோதாவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம், சிஏ சட்டத்தின் சட்டட் திருத்த மசோதா, நிறுவன செயலாளர்கள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இன்று மக்களவையில், மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கும் Consolidated Fund of India அமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை செய்யும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனைகளை இன்று எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளது.

மாநிலங்களவை

இன்று மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் கிரேன் ரிஜ்ஜு சார்பாக இடைதரர்களை கண்காணிக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

டாக்டர் கிரோடி லால் மீனா சார்பாக யூனிபார்ம் சிவில் சட்டம் தொடர்பான அறிக்கையை இன்று அவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

English summary
Parliament today: All you need to know about the 14th day of the Winter Session today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X