டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. ஒரே பனி மூட்டமா இருக்கு.. வரலாறு காணாத உறைபனியால் உறையும் டெல்லி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி வெப்பநிலை 2.4 டிகிரியாக இருந்தது.

டெல்லியை பொருத்த வரை குளிராக இருந்தாலும் மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் சரி சற்று தூக்கலாகவே இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காற்று மாசால் டெல்லி மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில் பொதுவாக டெல்லியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் ஆகும். அதாவது தமிழகத்தை பொருத்தவரை மார்கழி மாத குளிர் என்கிறோம்.

கலவரத்தை தடுக்க மின்சார தகடுடன் கூடிய வன்முறை தடுப்பு கவசங்களுடன் போலீஸ்.. டெல்லியில் ஷாக்!கலவரத்தை தடுக்க மின்சார தகடுடன் கூடிய வன்முறை தடுப்பு கவசங்களுடன் போலீஸ்.. டெல்லியில் ஷாக்!

இயல்பு வாழ்க்கை

தற்போது டெல்லியில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட சற்று குளிர் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சூரியன்

கடந்த சில தினங்களாக 4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் நிலவி வரும் நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 2.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. வியாழக்கிழமை நடந்த சூரிய கிரகணத்தின் போது சூரியனை காணாமல் வானம் மேக மூட்டமாக இருந்தது.

கண்ணுக்கு தெரியவில்லை

கண்ணுக்கு தெரியவில்லை

தற்போது பனிப்பொழிவால் டெல்லியில் சூரியனை பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது. குறைந்த அளவு வெளிச்சம் காரணமாக 100 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்கின்றனர் டெல்லிவாலாக்கள்.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

கடுங்குளிரால் ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர் அடுத்து வரும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றைய தினம் தலைநகர் டெல்லியில் 3.6 டிகிரி செல்சியஸாக இருந்ததால் மக்கள் லோதி சாலையில் உள்ள முகாம்களில் இரவில் தங்கியிருந்தனர்.

English summary
People's normalcy affected as Dense fog in Delhi. Even an object in 100 metres distance is invisible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X