Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலதாமதம் செய்தது ஏன்? சுப்ரீம் கோர்ட் சுளீர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு

கொலை வழக்கில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவது போல உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பேரறிவாளன் விடுதலை குறித்து 3 ஆண்டுகாலமாக ஆளுநர் முடிவெடுக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசை அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த வழக்கில் இன்று விசாரணை முடிந்தது. இதையடுத்து பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர்.

Perarivalan to be released from 31 years imprisonment hearing in the Supreme Court today Perarivalan to be released from 31 years imprisonment hearing in the Supreme Court today

கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

பேரறிவாளன் மனு மீது கடந்த மே 4ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.என்.நட்ராஜ் ஆஜரானார். 'ஒரு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் நீ கேட்ட நீதிபதிகள்.. அந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக் கூடாது?' என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அனைத்துத் தீர்ப்புகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது, அமைச்சரவை முடிவெடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்கவேண்டிய அவசியமே இல்லை. இது நீதிமன்றம் முடிவெடுக்கவேண்டிய விவகாரம். ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மே 10ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்தது. அப்படி மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இன்றைய தினம் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். ஆளுநருக்கு மத்திய அரசு சார்பில் வாதிடுவது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சரவை முடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நாங்கள் முடிவு எடுக்கப்போவதாக கூறிய பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறினீர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசு வாதிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் தமிழக ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசமைப்பின்படியும் உச்சநீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டியும் மத்திய அரசுதரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆளுநர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறிய பின்னரே குழப்பம் தொடங்கியதாக தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் இன்று விசாரணை முடிந்தது. இதையடுத்து பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+