டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவை மாணவியின் மழைப் பொழிவை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு மோடி பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: கோவை மாணவியின் மழை பொழிவை கண்டறியும் தொழில்நுட்பம் நிச்சயம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்றின்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். மென்பொருள் குறித்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டது.

PM Modi addresses the nation and interacts with students

இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் மோடி. முதலில் கோவை மாணவியுடன் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அவர் கூறுகையில் இளைஞர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்.

மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி கூறியுள்ளார். கோவை மாணவியின் தொழில்நுட்பம் நிச்சயம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சவாலான கால கட்டத்தை மாணவர்கள் வெற்றியுடன் கடந்து வருவார்கள்.

மாணவர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் உள்ள மருத்துவமனைகளை உலக தரத்தில் மாற்றுவதே இலக்கு என்றார் மோடி.

ஒரு சானிட்டரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு அரசு கொடுத்து வருகிறது. மறுமுறை பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். மறுமுறை பயன்படுத்தப்படும் நாப்கின்களை உருவாக்கிய மாணவரை பாராட்டுகிறேன் என்றார் மோடி.

மேலும் மோடி கூறுகையில் எர்ணாகுளத்தில் உட்கார்ந்து கொண்டு வடகிழக்கு பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்க புதிய பொருட்களை உருவாக்கியுள்ளீர்கள். இணையதள இணைப்பு தொடர்பான பிரச்சினைகளை களைவது குறித்த தொழில்நுட்பத்தை இந்த மாணவர் கண்டறிந்துள்ளார்.

Recommended Video

    Rafale-ஐ Modi, Rajnath singh எப்படி வரவேற்றார்கள்? | Oneindia Tamil

    போலீஸாருக்கு உதவும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த மாணவனுக்கு எனது பாராட்டுகள். உங்களை தொடர்பு கொள்ளுமாறு ஐபிஎஸ் பயிற்சி மைய அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். அவர்களுக்கு உங்கள் தொழில்நுட்பம் குறித்த விளக்கத்தை அளியுங்கள். களத்தில் உள்ளவர்களுடன் நீங்கள் உரையாற்ற வேண்டும். அப்போதுதான் உங்கள் பொருள் நல்ல லெவலுக்கு செல்லும் என்றார் மோடி.

    English summary
    PM Modi addresses the nation and interacts with students through Video Conferencing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X