டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்றுங்கள்'.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உள்பட சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு

தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொரோனா பேயாட்டம்

கொரோனா பேயாட்டம்

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 3,00,000-க்கும் மேல் கடந்து சென்று விட்டது. தினசரி உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது . தினசரி உயிரிழப்பு 2,500-ஐ கடந்து செல்கிறது. கொரோனவை தடுக்க தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில்தான் தொற்று மொத்த பாதிப்பில் 80% மேல் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். காணொளி மூலமாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி,, உ.பி., கர்நாடகம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்பட சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு

தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பல்வேறு கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

உன்னிப்பாக கவனிக்கிறோம்

உன்னிப்பாக கவனிக்கிறோம்

தங்கள் மாநிலங்களில் எவ்வளவு ஆக்சிஜன் தேவை, தடுப்பூசி எவ்வளவு தேவை என்பது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்கள். பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமுள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என பல்வேறு மாநிலங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி உறுதி

அனைவரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்றினால் வளங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ராணுவ விமானம் மற்றும் ரயில் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படும். ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் எந்த வித தடையும் இல்லாமல் இலக்கை சென்றடைவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minister Modi spoke at a consultative meeting with chief ministers that all should work together towards the goal of one nation to eradicate the corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X