டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுத்தையை விட “ஃபாஸ்ட்”.. பிரச்சனை வந்துட்டா கையிலயே புடிக்க முடியாது.. மோடியை கலாய்த்த ஒவைசி

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறங்களிலும் இந்தியா, சீனா படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக மோடி அரசு கூறியதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கண்டு சீன மக்கள் சிரிப்பதாக பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்து உள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கைலாஷ் பகுதியில் சீனாவின் ஊடுருவலை இந்திய பாதுகாப்பு படைகள் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது. அப்போது கைலாஷ் பகுதியில் சில இடங்களும் கிடைத்தன.

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - தமிழக மக்கள் ஹேப்பி! அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - தமிழக மக்கள் ஹேப்பி!

சீனா அத்துமீறல்

சீனா அத்துமீறல்

அதன் பின்னர் இருநாட்டு படைகள் மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லடாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் சீனா வேகமாக நகரத்தை உருவாக்கி வருகிறது. பேன்காங் ஏரியின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் சாலைகள், கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்தது.

பாலம் அமைப்பு

பாலம் அமைப்பு

அத்துடன் 15 மீட்டர் நீளம் கொண்ட நீர் வழி பாலம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. அத்துடன் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பேன்காங் ஏரியில் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கருவிகள் போன்றவை குவிக்கப்பட்டு இருப்பதையும் செயற்கைகோள் படங்கள் தெளிவாக காட்டுகின்றன.

 இந்தியா விளக்கம்

இந்தியா விளக்கம்

"செயற்கைக்கோள் புகைப்படத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் பாலம் அமைந்து இருக்கும் பகுதியை கடந்த 60 ஆண்டுகளாக சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இத்தகையை சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்." என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்து உள்ளது.

 அசதுத்தீன் ஒவைசி

அசதுத்தீன் ஒவைசி

இந்த நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அசதுத்தீன் ஒவைசி, "நம் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது தொடர்பாகவும் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் பிரதமர் மோடியிடம் கேட்டால் அவர் சிறுத்தையைவிட ஓடிவிடுகிறார். இதுபோன்ற விசயங்களில்தான் அவர் வேகமாக இருக்கிறார். நாம் அவரை மெதுவாக போக சொல்கிறோம்." என்றார்.

English summary
Hyderabad MP and AIMIM Party leader Asaduddin Owaisi said that the 'Prime Minister Narendra Modi is running faster than leopard while we asking about Chinese encroachment in Indian lands and Jobless issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X