டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிந்தியா, வருண் காந்திக்கு வாய்ப்பா? விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்.. பிரதமர் மோடி திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் டெல்லியில் கடந்த வாரம் 2 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்கள். மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், நிர்வாகம் குறித்து ஆலோசனைசெய்தனர். ஒவ்வொரு அமைச்சர்களும் எப்படி செயல்பட்டனர், யாரெல்லாம் சரியில்லை என்று ஆலோசனை செய்தனர்.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. காலியாக உள்ள அமைச்சரவை பொறுப்புகளை நிரப்பும் வகையிலும், மற்ற சில அமைச்சர்கள் மாற்றம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அசத்தல் ஆய்வு.. இந்தியர்களிடம் அதிகரித்த ஆன்டிபாடி.. 3வது அலையிலிருந்து குழந்தைகள் தப்ப வாய்ப்பு அசத்தல் ஆய்வு.. இந்தியர்களிடம் அதிகரித்த ஆன்டிபாடி.. 3வது அலையிலிருந்து குழந்தைகள் தப்ப வாய்ப்பு

எத்தனை

எத்தனை

பிரதமரின் அமைச்சரவையில் 79 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது 12 அமைச்சர்கள் இடம் காலியாக இருக்கிறது. 57 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். 24 அமைச்சர்கள், 9 தனி அதிகாரம் கொண்ட இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் உள்ளனர். 12 காலி இடங்களை இதில் நிரப்ப வேண்டும்.

 எப்படி காலியானது

எப்படி காலியானது

சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய காட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அக்கட்சிகளிடம் இருந்த அமைச்சர் பொறுப்புகள் காலியாகி உள்ளது. அதேபோல் எல்ஜேபி கட்சி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மரணம், பாஜக அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம் காரணமாக மேலும் சில காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

மாற்றம்

மாற்றம்

இதனால் ஒரே அமைச்சர்கள் சிலர் இரண்டு துறைகளை கவனிக்கும் நிலை உள்ளது. இதையடுத்தே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்கிறார்கள். உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்கள் நடக்க உள்ளதால் அதற்கு ஏற்றபடி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்கிறார்கள். முக்கியமாக பொறுப்பு கிடைக்காமல் இருக்கும் இளம் தலைவர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த சிந்தியாவிற்கு அமைச்சரவையில் இடம் கிடிட்க்கும் என்கிறார்கள். அதேபோல் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த தினேஷ் திரிவேதிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கிறார்கள்.

வேறு யார்

வேறு யார்

இது போக பூபேந்தர் யாதவ், அஸ்ஹவினி பைஸ்னாப், வருண் காந்தி, லடாக் எம்பி ஜம்யங் டெஸ்ரிங் நமக்யால் ஆகியோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம். இதுபோக கூட்டணியில் கட்சியில் இருக்கும் சிலருக்கு அமைச்சரவை பொறுப்புகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
PM Modi plans for cabinet expansion: Scindia, Varun Gandhi, and few others may get a chance in the berth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X