11,300 அடி உயரம்! உறைய வைக்கும் குளிர்.. கிச்சடி சுவைத்து தகர கூடாரத்தில் இரவை கழித்த பிரதமர் மோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலம் மானாவில் பனி பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் உடலை உறைய வைக்கும் குளிரில் எல்லை சாலை அமைப்பினரின் தகர கூடாரத்தில் தங்கி இரவை கழித்தார். அப்போது அவர் கிச்சடியை ருசித்து சாப்பிட்டார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். வெள்ளிக்கிழமை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாலி கிராண்ட் விமானநிலையத்தில் பிரதமர் மோடி இறங்கினார்.
இதையடுத்து ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிற உடையை பிரதமர் மோடி அணிந்திருந்தார்.

வளர்ச்சி பணிகள்
அதன்பிறகு கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் ரூ.3,400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் சாலை மற்றும் ரோப்கார் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குறிப்பாக சீனா எல்லையை இணைக்கும் வகையில் மனாவில் இருந்து மனா பாஸ் வரையிலான சாலை ரூ.574 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணி 2026 மார்ச்சில் முடிவடைய உள்ளது.

இரவில் தங்கிய பிரதமர் மோடி
இந்நிலையில் பின்னர் மானா கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து நேற்று மானா அருகே கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் பனி பிரதேசத்தில் எல்லை சாலை அமைப்பினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதையடுத்து பிரதமர் மோடி நேற்று இரவு அங்கேயே தங்கினார். இதுபற்றிய அறிவிப்பு தாமதமாக வந்ததால் அதிகாரிகள் திகைத்து போயினர். இருப்பினும் பிரதமர் மோடி தங்குவதற்காக ஏற்பாடுகள் விரைவாக செய்து முடிக்கப்பட்டன.

கிச்சடி சாப்பிட்ட பிரதமர் மோடி
அதன்படி தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் பிரதமர் மோடி தங்கினார். மேலும் எல்லை சாலை அமைப்பினருக்கான சமையல் தொழிலாளி சமைத்த உணவை அவர் சாப்பிட்டார். பிரதமர் மோடி கிச்சடியை விரும்பி சாப்பிடுவார் என்பதால் அங்கிருந்த பொருட்களை வைத்து கிச்சடி சமைக்கப்பட்டது. மேலும் மாண்டவே கி ரொட்டி, சட்னி, புட்டு ஆகியவற்றையும் பிரதமர் மோடி ருசிபார்த்தார்.

தகர கூடாரத்தில் தங்கிய மோடி
இதுபற்றி எல்லை சாலை அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ‛‛பிரதமர் மனாவில் எங்களுடன் தங்க இருப்பதாக திடீரென்று கூறினர். இருப்பினும் 72 மணிநேரத்துக்கு முன்பு கூறியதால் நாங்கள் உஷாராகி ஏற்பாட்டை தீவிரப்படுத்தினோம். இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் உடனடியாக அதனை செய்தோம். தற்காலிகமாக அமைத்த கூடாரத்தில் பிரதமர் மோடி தங்கினார். இந்த கூடாரம் வெறும் தகரத்தால் ஆனது.

கிச்சடி சமைக்க கூறிய மோடி
இந்த கூடாரத்தில் இருந்து இரவில் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினர். இந்த வேளையில் கிச்சடி சமைக்க பிரதமர் மோடி கூறினார். பிரதமருக்காக எந்த உணவு பொருட்களும் கொண்டு வரப்படவில்லை. இதனால் தொழிலாளர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த ரேஷன் பொருட்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

உறைய வைக்கும் குளிர்
இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவும். இதனால் அறையை சூடாக வைத்திருக்க சிறிய மின்ஹீட்டர் பிரதமர் மோடியின் கூடாரத்தில் பயன்படுத்தப்பட்டது. வேறு எந்த வசதிகளும் பயன்படுத்தப்படவில்லை'' என்றார்.

பாராட்டிய மோடி
மேலும் உணவு தயாரித்த தேவேந்திரா, ராஜேஷ், அனிதேஷ் குமார் மற்றும் சுரேஷ் சைனி ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் அவர்களின் சேவையை பாராட்டி, ‛‛கடின உழைப்பால் தான் அனைத்தும் அடையாளப்படுத்தப்படுகிறது'' என்ற வாசகத்தை பிரதமர் மோடி எழுதினார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications