தமிழகம்: ரூ151.35 கோடியில் 5 மாவட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள்-அடிக்கல் நாட்டிய மோடி!
டெல்லி: தமிழ்நாட்டில் ரூ151.35 கோடியில் 5 மாவட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தமிழ்நாட்டின் ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 18 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டம் என்பது மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். சுகாதார உள்கட்டமைப்பில் நிலவும் முக்கிய இடைவெளிகளை நீக்குவது மற்றும் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்துவது, இதன் நோக்கமாகும். எதிர்கால சுகாதார அவசர நிலைகளுக்குத் தயாராகும் வகையில் ஆரம்பம் முதல் தீவிர சிறப்பு சிகிச்சை நிலை வரையிலான சுகாதார சேவைகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19-ல் இருந்து பாடம்: வலுவான சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கு, குறிப்பாக மாவட்ட அளவிலும் மற்றும் அதற்கு கீழே உள்ள பொது மருத்துவமனைகளின் தற்போதைய கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற உண்மையை கோவிட்-19 பெருந்தொற்று எடுத்துக்காட்டியது.
தீவிர சிகிச்சை பிரிவுகள்: தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகள் (சி.சி.பி-கள்) மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான திறனை மேம்படுத்துகின்றன. குறிப்பாக பெருந்தொற்று மற்றும் பிற சுகாதார நெருக்கடிகளின் போது அவசரகால எதிர்வினைத் திறனை அதிகரிக்கின்றன.
602 மாவட்டங்களில்: ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள மாவட்டங்களில் தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. திட்டத்தின் கீழ் மொத்தம் 602 மாவட்டங்களில் இந்தப் பிரிவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
என்ன வசதிகள்?: தீவிர சிகிச்சைப் பிரிவுகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள்/ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், உயிர் காக்கும் அமைப்புமுறைகளுடன் கூடிய 50/100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளை நிறுவுவதன் மூலம் இந்தத் திட்டம் மாவட்ட அளவில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும். இதன் மூலம் தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர மருத்துவ சேவை, ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள், மருத்துவ அவசர காலங்களில் மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகளை நிர்வகிக்க மருத்துவமனைகளை தயார்படுத்துதல் முதலியவற்றிற்கு இவை ஒருங்கிணைந்த பங்கு வகிக்கும்.
ரூ17,201.38 கோடி: தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளைக் கட்டமைப்பதற்காக மாநிலங்களுக்கு ரூ. 17,201.38 கோடி வழங்க நிர்வாக ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கான திட்ட மதிப்பீடு: ரூ. 151.35 கோடி.
5 மாவட்டங்களில்..: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு- ரூ40.05 கோடி; அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்- ரூ 40.05 கோடி; அரசு மருத்துவக் கல்லூரி, தேனி- ரூ 23.75 கோடி; ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை, ராமநாதபுரம்- ரூ23.75 கோடி; ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை, காஞ்சிபுரம்
ரூ 23.75 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications