எதுக்கு வம்பு.. இந்தியில் வேண்டாம்.. ஆங்கிலத்தில் பதவியேற்ற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்!
டெல்லி : மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் ஆங்கிலத்தில் பதவியேற்றுள்ளனர்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வந்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று கொண்டது. இதில் மொத்தமாக 30 மத்திய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 27 ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களும், 10 பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்களும், 5 பட்டியலின பழங்குடியினருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா, சிவராஜ் சிங் செளஹான் ஆகியோர் இந்தியில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதன்பின் மத்திய அமைச்சராக பொறுப்பேற்க வந்த நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டார். தமிழ்நாட்டை பின்னணியாக கொண்ட நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதி மொழி எடுத்துள்ளார்.
இவர் பல்வேறு தருணங்களில் தனக்கு இந்தி முழுமையாக பேச வராது என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சர்பானந்த சோனோவால் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவியேற்றுள்ளனர். பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பெரும்பாலானோர் இந்தியிலேயே உறுதிமொழி எடுத்து கொண்ட நிலையில், இவர்கள் மூவர் மட்டும் ஆங்கிலத்தில் எடுத்துள்ளனர்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications