ஜனாதிபதி தேர்தல்: மம்தா கூட்டத்துக்கு மார்க்., கம்யூனிஸ்ட் ‛ஜகா’! உறுதி செய்த சீதாராம் யெச்சூரி
டெல்லி: எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களத்தில் இறக்குவது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் பங்கேற்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அதன் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட உள்ளார்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன.

பாஜகவில் குழு
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பாஜக முயன்று வருகிறது. இதற்காக அந்த கட்சியில் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டார் இடம்பெற்றுள்ளனர். பாஜகவும் ஜனாதிபதி வேட்பாளர் உள்பட தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு
அதேநேரத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை(ஜூன்15) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

‛ஜகா’ வாங்கிய கம்யூனிஸ்ட்
இந்த கூட்டத்தில் பங்கேற்க சிவசேனா மறுப்பு தெரிவித்து விட்டது. அதேநேரத்தில் ‛‛ஆலோசனை கூட்டம் தொடர்பாக பிற கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக முடிவெடுத்து உள்ளார்'' என குற்றம்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இதனை மீண்டும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுத்துிவிட்டார். மம்தா பானர்ஜி தலைமையிலான நாளைய ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்'' என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பங்கேற்பு
இதற்கிடையே மம்தா பானர்ஜியின் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கான இன்று மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications