பிரதமர் மோடி தலைப்பாகையை கவனித்தீர்களா..! செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலம்
டெல்லி: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
Recommended Video
அவர் வெள்ளை நிறத்திலான தேசிய கொடி பொறிக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்திருந்தார். பிரதமர் தன்னுடைய உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான்தான் முதலாமவன் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில், வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி இருப்பது பெருமையளிப்பதாக கூறியுள்ளார். இன்று அவர், வெள்ளை நிறத்தில் தேசியகொடி பதிக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்திருந்தார்.

பிரதமர் மோடி தனது உடையில் எப்போதும் தனி கவனம் செலுத்தும் நபராவார். தமிழ்நாட்டிற்கு அவர் வரும்போதெல்லாம் பாரம்பரியான வேட்டி, சட்டை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கு பயணிக்கும்போதும் அவர் அம்மாநிலத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், அவர் இன்று அணிந்திருந்த தலைப்பாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுமாறு 'ஹர் கர் திரங்கா' எனும் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை பிரதிபலிக்கும் விதமாக அவருடைய தலைப்பாகையும் இருந்துள்ளதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். மோடி பிரதமராக தேர்வானதிலிருந்து ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் தலைப்பாகை அணியும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்.
இவ்வாறு கடந்த 2014ம் ஆண்டு தனது முதல் சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி சிவப்பு ஜோத்புரி பந்தேஜ் தலைப்பாகையை அணிந்திருந்தார். 2015ல் மஞ்சள் வண்ணத்திலும், 2016ல் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திலும் தலைப்பாகையை அணிந்திருந்தார். 2019ல் அனைத்து வண்ணங்களையும் கலந்த நிறத்திலும், 2020ல் காவி நிறத்திலும் இந்த தலைப்பாகை இருந்தது. தென்னிந்தியாவில் கருப்பு உடை அணிவது எப்படி எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடைமுறையோ அதேபோல, வட இந்தியாவில் பல்வேறு நிறங்களில் தலைப்பாகை அணிவது பல்வேறு உணர்வுகளை வெளிப்படுதும் முறையாக கருதப்படுகிறது.
புதிய பாதையில் இந்தியா காலடி வைக்கும் நாள் இது! வீடுகளில் தேசிய கொடியேற்றியது பெருமை- மோடி பேச்சு