டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா! டெல்லியில் இருந்தபடி ஸ்வீடனில் கார் ஓட்டிய பிரதமர் மோடி! அது எப்படி? மக்கள் வியப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் இன்று 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி செய்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

டிக்கெட் முன்பதிவு முதல் ஷாப்பிங் வரை இப்போதெல்லாம் இணையத்தில் தான் நடைபெறுகிறது. இணையச் சேவை என்பது இந்தக் காலத்தில் அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கூட மொபைல் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இது மக்களுக்கு தங்கள் வாழ்க்கையை எளிதாக்க உதவுகிறது.

இனி மின்னல் வேகம்தான்.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் 5 ஜி சேவையை தொடங்கியது.. என்ன ஸ்பீட் தெரியுமா? இனி மின்னல் வேகம்தான்.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும் 5 ஜி சேவையை தொடங்கியது.. என்ன ஸ்பீட் தெரியுமா?

மொபைல் தொழில்நுட்பம்

மொபைல் தொழில்நுட்பம்

மொபைல் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணம் 4ஜி சேவை தான். சில ஆண்டுகளுக்கு முன் டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய அன்லிமிடட் 4ஜி சேவை நாட்டில் உள்ள பல துறைகள் வளர காரணமாக இருந்தது. பெரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி என்பது பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் இணையத்தை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

இந்தியாவில் 5ஜி

இந்தியாவில் 5ஜி

இந்தச் சூழலில் நமது டெலிகாம் துறை இன்று அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்துள்ளது. இன்றைய தினம் நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உலகில் மிகப் பெரிய மொபைல் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் இப்போது 5ஜி சேவை வந்துள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் 4ஜி சேவையை விட 5ஜி பல மடங்கு வேகமாக இருக்கும்.

அதிவேகம்

அதிவேகம்

இதை டெல்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 8 நகரங்களில் 5ஜி சேவை கிடைக்க உள்ளது. ஒரு நொடிக்கு 10 ஜிபி வரை இணையச் சேவை இருக்கும். இதன் மூலம் முழு படத்தையே சில நொடிகளில் டவுன்லோட் செய்துவிடலாம். இதனிடையே இணைய ஸ்பீட்டை விளக்கும் வகையில் இன்று காலை நடந்த நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அதாவது பிரதமர் மோடி டெல்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இருந்தபடியே 5ஜி மூலம் ஸ்வீடன் நாட்டில் இருக்கும் காரை இயக்கி உள்ளார். அதிவேக 5ஜி இணையம் இதைச் சாத்தியமாக்கி உள்ளது. இது தொடர்பான படங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஐரோப்பாவில் அரங்கு ஒன்றில் இருந்த வாகனத்தைப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி இயக்கினார்.

என்ன விலை

என்ன விலை

4ஜியை விட பல மடங்கு வேகமாக இருக்கும் 5ஜி சேவை ஒரு வழியாக இந்திய மக்களுக்குக் கிடைக்க உள்ளது. வேகம் பல மடங்கு இருப்பதால் விலையும் அதிகமாக இருக்குமோ என்று நீங்கள் அச்சப்படுவது புரிகிறது.! ஆனால் 5ஜி சேவைக்கான கட்டணம் 4ஜி கட்டணம் போல அல்ல அதை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விலைப்பட்டியல் இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

English summary
PM Narendra Modi drives car in Sweden from Delhi: India launches its 5G service in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X