“கொரோனா வைரஸ் நீங்கவில்லை”எப்போது மீண்டும் தோன்றும் என்று தெரியாது..பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை
டெல்லி : இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் வடிவத்தை மாற்றி மாற்றி மீண்டும் தலைதூக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 3வது அலை நிறைவடைய தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,054 புதிய கோவிட் -19 வழக்குகள் மற்றும் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன.
சனிக்கிழமையன்று கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை டோஸ்கள் ஏப்ரல் 10 முதல் அனைத்து பெரியவர்களுக்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வரும் நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு கூறியது. மேலும் அந்தந்த மாநிலங்களில் பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவு எடுக்கலாம் எனவும் கூறியது. உத்திரபிரதேசம், ஹரியானா , மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழகத்திலும் கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை எனவும், தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் வடிவத்தை மாற்றி மாற்றி மீண்டும் தலைதூக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற மா உமியா தாம் நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரையாற்றிய மோடி, இதனை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
"கொரோனா ஒரு பெரிய நெருக்கடி, நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை. அது ஒரு இடைநிறுத்தத்தை எடுத்திருக்கலாம், ஆனால் அது எப்போது மீண்டும் தோன்றும் என்று எங்களுக்குத் தெரியாது. இது ஒரு 'பஹுருபியா' நோய். இதைத் தடுக்க, கிட்டத்தட்ட 185 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டன, இது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.உங்கள் ஆதரவால் இது சாத்தியமாகியுள்ளது" என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் எச்சரிக்கை
பஹுருபியா என்றால் உருவத்தை வடிவத்தை மாற்றும் ஒன்று அர்த்தம். அதன்படிதான் பிரதமர் கொரோனாவை பஹுரூபியா என குறிப்பிட்டார். கோவிட் -19 எப்போது மீண்டும் தோன்றும் என்று யாருக்கும் தெரியாது எனவும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் நீங்கவில்லை, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கிறது, மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications