'பிரதமரே,உங்கள் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலைதான் 'வளர்ச்சியடைகிறது'.. பிரியங்கா காந்தி சாடல்
டெல்லி: 2 வாரங்களில் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தான் வளர்ச்சியடைவதாகச் சாடியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபுறம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
இந்த ஆண்டு தொடக்கம் முதல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தான் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது வெறும் 2 வாரங்களில் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படுவது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வர்த்தக ரீதியான சிலிண்டர் விலையும் 75 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றர். கேஸ் சிலிண்டர் விலை இப்படித் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி விமர்சனம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கடுமையாகச் சாடிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "பிரதமரே, உங்கள் ஆட்சியில் இரண்டு வகையான வளர்ச்சி மட்டுமே நம் நாட்டில் நடைபெறுகிறது: ஒருபுறம் உங்கள் கோடீஸ்வர நண்பர்களின் வருமானம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மறுபுறம், சாதாரண மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இது வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சியை விடுப்பில் அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி சாடல்
அதேபோல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைச் சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "நம் நாட்டு மக்களை வெறும் வயிற்றுடன் தூங்கக் கட்டாயப்படுத்தும் ஒருவர் தான், இப்போது தனது கோடீஸ்வர நண்பர்களின் நிழலில் ஓய்வெடுக்கிறார். இப்போது, அநீதிக்கு எதிராக இந்த தேசம் ஒன்றுசேரத் தொடங்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications