மறக்க முடியுமா? இந்தியாவை புரட்டிப் போட்ட பணமதிப்பிழப்பு! சர்ச்சைகளும் மக்கள் சந்தித்த சிக்கல்களும்!
டெல்லி : 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நிலையில் தற்போது அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எழுந்த சர்ச்சைகள் என்னென்ன? பொதுமக்கள் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி சாமானியர்கள் தொடங்கி மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வரை அவ்வளவு சீக்கிரம் அந்த மாலை நேரத்தை மறந்து விட முடியாது. அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய பொருளாதாரத்தை தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என பேசினார். இதனால் ஏதேனும் புதிய திட்டத்தை அறிவிக்க போகிறாரா என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

பணிமதிப்பிழப்பு
அப்போதுதான் அந்த இந்தியா முழுவதுமே பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாட்டில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிவித்தார். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி விட்டு புதிய 500 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

புதிய ரூபாய் நோட்டு
அடுத்தடுத்து பல நாட்களுக்கு வங்கிகளிலும் ஏடிஎம் வாசல்களிலும் பொதுமக்கள் காத்துக் கிடந்தனர். தங்கள் வசம் இருந்த செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை ஏடிஎம் மையங்களிலும் வங்கிகளிலும் செலுத்தி விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு ஆர்வம் காட்டினர். இதனால் மிகப்பெரிய பொருளாதார தாக்கம் ஏற்பட்டதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டம் தோல்வியடைந்த திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால் பல பிரபலங்களும் பாஜகவினரும் பல அரசியல் திரை பிரபலங்களும் இந்தியா புதிய பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதன் மூலம் கருப்பு பணம் வெளியே வந்துவிடும் என சமூக வலைதளங்களில் சிலாகித்துக் கொண்டாடினர்.

மக்கள் மரணம்
ஆனால் களத்தில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. பெரும் பணக்காரர்கள் வங்கி அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக பதுக்கி வைக்கத் தொடங்கினர். பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி தருவதாக மோசடி சம்பவங்களும் அரங்கேறின. கையில் வைத்திருந்த 1000 500 ரூபாய் நோட்டுகளோடு கால் கடுக்க வெயிலில் காத்திருந்த பலரும் மயங்கி விழுந்து சரிந்தனர்.

உச்சநீதிமன்றம்
ஆனால் அதை குறித்து எண்ணிக்கை தங்களிடம் இல்லை என மத்திய அரசு கைவிரித்தது. தற்போது அது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. 58 மனுக்களையும் தள்ளுபடி செய்திருக்கின்றனர் நீதிபதிகள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிலர் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் சிலருக்கு பாதிப்பு இருந்தது நாளடைவில் அது சரி செய்யப்பட்டது என மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சிக்கல்கள்
அதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒரே ஒரு நீதிபதி மற்றும் மாற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். சரி தற்போதைய விஷயத்துக்கு வருவோம் கூலித்தொழிலாளிகள், வீட்டில் ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் என சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பொதுமக்கள் மருத்துவச் செலவுகளுக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏன் பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு கூட அங்கும் இங்கும் ஓடி அலைந்த நிகழ்வுகளை காண முடிந்தது. பெரு வியாபாரிகள் ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷனில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட நிலையில் கடைநிலை மக்களும் அன்றாடம் அரிசி பருப்பு வாங்கக்கூட முடியாமல் தவித்தனர்.

கருப்பு பணம் ஒழிந்து விட்டதா?
நாட்டிலே ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்கும் போது ஏடிஎம் வாசலில் நிற்கக் கூடாதா என்பது போன்ற பக்கம் பக்கமான வசனங்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. எல்லாவற்றையும் தாண்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஏன் அதற்கு மேலேயே ஆகி உள்ள நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்து விட்டதா? வரி ஏய்ப்பு குறைந்து விட்டதா? மக்கள் அனைவரும் பணக்காரர் ஆகி விட்டார்களா என்பது தான் அனைவரின் கேள்வி.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications