டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் கொள்முதல்.. ரூ.526 கோடி விமானத்தை ரூ. 1670 கோடிக்கு வாங்கியது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி!

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் விமானங்களை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா ரபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.மொத்தமாக 36 விமானங்களை இந்தியா ஆர்டர் செய்த நிலையில் இன்று 5 விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் அதி நவீன 4.5ம் தலைமுறையைச் சேர்ந்த ரபேல் போர் விமானங்கள் ஆகும் இது.

Rafale: Why each aircraft costs ₹1670 Crores instead of ₹526 Crores? asks Rahul Gandhi

இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு வந்தது. இந்த விமானங்கள் இந்தியா வந்ததை மக்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ரபேல் ஒப்பந்தத்தை தொடக்கத்தில் குற்றஞ்சாட்டி வந்தவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துவிட்டதாக அவர், குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ரபேல் விமான கொள்முதல் குறித்து காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

Rafale: Why each aircraft costs ₹1670 Crores instead of ₹526 Crores? asks Rahul Gandhi

அதில், இந்திய விமானப்படை ரபேல் விமானங்களை வாங்கியதற்கு வாழ்த்துகள்.

இந்த நிலையில், மத்திய அரசு பின் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன்

1) ரபேல் விமானங்களை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது .

2) 126 விமானங்களுக்கு பதில் ஏன் 36 விமானங்களை மத்திய அரசு வாங்குகிறது

3) ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை அளிக்காமல் ஏன் திவாலான் அணில் அம்பானி நிறுவனத்திற்கு ஏன் ரூ. 30000 கோடி ஓப்பந்தத்தை அளிக்க வேண்டும், என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
Rafale: Why each aircraft costs ₹1670 Crores instead of ₹526 Crores? asks Rahul Gandhi in his tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X