அன்பு விராட், இந்த மக்கள் எல்லாம் வெறுப்பால் நிரப்பப்பட்டுள்ளார்கள்.. கோலிக்கு ராகுல் ஆதரவு
டெல்லி: அன்பு பரிமாற யாரும் இல்லாததால் அவர்கள் வெறுப்பால் நிறைந்திருக்கின்றனர். அவர்களை மன்னியுங்கள், அணியை காப்பாற்றுங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது சூப்பர்-12 சுற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்தது. முதல் இரண்டு ஆட்டத்திலும் டாஸ் தோல்வி காரணமாக இந்தியா தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்திய அணி உலககோப்பை டி20 போட்டியில் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏறக்குறைய இல்லை என்றே நிலையே உள்ளது. இந்திய ரசிகர்கள், உலக கோப்பையை இந்தியா எப்படியும் வென்றுவிடும் என்று கனவுடன் இருந்த நிலையில், அதுநடக்காமல் போனதால் கேப்டன் கோலியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்,.

கடுமையான விமர்சனம்
கோலி மீது அணி வீரர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்திய அணியைப் பற்றிப் புதுப்புது தகவல்கள் வெளிவருகின்றன. டீமிற்குள் பிளவு, கோலியை மாற்ற வேண்டும், பயிற்சியாளர் சரியில்லை, பவுலர்கள் சரியில்லை, பேட்ஸ்மென்கள் போராடாமல் சர்வசாதாரணமாக தோற்றுவிட்டார்கள் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐபிஎல் போட்டிகள்
இந்திய அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது என்றும், ஐபிஎல் போட்டிகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு உலக கோப்பையில் அவர்கள் கோட்டைவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

என்ன சொல்கிறார்கள்
இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், சர்வதேச அளவில் பல வீரர்களும் விமர்சனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்திய அணியின் வீரர்கள் நம்பிக்கையை உடைந்து காணப்படுகிறார்கள் . சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபின் வேகப்பந்துவீச்சாளர் ஷமிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முகமது ஷமி குறித்தும், அவரின் குடும்பத்தார், மதம் குறித்தும் அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியாகின.

மதப்பிரச்சாரம்
இந்தச் சம்பவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த கேப்டன் கோலி, "ஷமியை மதரீதியாக விமர்சித்தவர்கள், தாக்கியவர்கள் விரும்பினால் இன்னும் வேண்டுமானால் அதிக பலத்துடன் வரட்டும். எங்கள் அணியில் உள்ள சகோதரத்துவம், நட்பு, எதையும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்திய அணியின் கேப்டனாக உறுதி கூறுகிறேன், அணிக்குள் நாங்கள் உருவாக்கியுள்ள கலாச்சாரத்தை இதுபோன்ற விஷயங்கள் .0001 சதவீதம் கூட ஊடுருவ முடியாது. இதற்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

கோலி மனஉளைச்சல்
இந்நிலையில் நியூசிலாந்து போட்டிக்கு பின் கேப்டன் விராட் கோலிக்கு கடுமையான அழுத்தமும், நெருக்கடியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுத்துடன் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகும் சூழலில் இந்தத் தோல்விகளும், வெறுப்பு பிரச்சாரங்களும் அவருக்கு மனஉளைச்சலை தருவதாக கூறப்படுகிறது,

ராகுல் காந்தி ஆதரவு
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டர் வாயிலாக கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "அன்பு விராட், இந்த மக்கள் எல்லாம் வெறுப்பால் நிரப்பப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு யாரும் அன்பைக் கொடுக்கவில்லை. இவர்களை மன்னித்துவிடுங்கள். இந்திய அணியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications