டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல அந்த துவைக்காத கம்பளி, ஜன்னல் திரைகளை அகற்றுங்க.. கொரோனா வரப் போகுது.. ரயில்வே அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: ஏசி கோச்சுகளில் தினமும் துவைக்காத கம்பளிகள், ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருக்கும் துணிகள் (கர்டைன்கள்) ஆகியவற்றை அகற்ற மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அவை தினமும் துவைக்காததால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பாதிப்பு... கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதன் பரவலைத் தடுக்கு ஒவ்வொரு நாடுகளும் அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாத வெவ்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.

    கேராளாவைப் பின்னுக்கு தள்ளிய மகாராஷ்டிரா.. பள்ளி, கல்லூரிகள், மால்கள் மூட உத்தரவு.. ஏன் தெரியுமா!

    படுக்கை விரிப்பு

    படுக்கை விரிப்பு

    விமானங்களும் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகின்றன. பேருந்துகளும் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்படுகின்றன. ரயில்களை பொருத்தமட்டில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி கோச்சுகளில் பெட்ஷீட், டவல், தலையணை உறைகள், படுக்கை விரிப்பு ஆகியன வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தினந்தோறும் துவைக்கப்படுகின்றன.

    உத்தரவு

    உத்தரவு

    ஆனால் அங்கு வழங்கப்படும் கம்பளிகள் தினந்தோறும் துவைக்கப்படுவதில்லை. அது போல் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டுள்ள ஸ்க்ரீன்கள் எனப்படும் கர்டைன்களும் தினம் தோறும் துவைப்பதில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மேற்கு ரயில்வேயும் மத்திய ரயில்வேயும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

    மறுஉத்தரவு

    மறுஉத்தரவு

    அதன்படி ஏசி கோச்சுகளில் உள்ள கர்டைன்கள், கம்பளிகள் ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் துவைக்கப்படுவதில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அவற்றை மறுஉத்தரவு வரும் வரை உடனடியாக அகற்ற வேண்டும். கம்பளிகள் வேண்டுமென்றால் பயணிகள் அவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சுத்தப்படுத்த உத்தரவு

    அது போல் மத்திய ரயில்வேயும் இதே உத்தரவை பிறப்பித்துள்ளது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் தொட்டு செல்லும் பகுதிகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கதவின் கைப்பிடிகள், உள்ளே நுழையும் கதவுகளின் கைப்பிடிகள், சீட்டுகளின் கார்டுகள், ஜன்னல் கண்ணாடிகள், ஜன்னல் கம்பிகள், பெர்த்தில் ஏறுவதற்கு பயன்படுத்தப்படும் ஏணிப்படிகள், சுவிட்சுகள், சார்ஜர் போடும் பாயிண்டுகள் ஆகியவற்றை கிருமி நாசினிகள் கொண்டு ஒவ்வொரு பயணம் முடிந்த பின்னர் சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Western and Central Railways ordered to remove all curtains and blankets in AC coach till further orders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X