டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக நடத்தும் முக்கிய கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Oath: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு!- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக நடத்தும் முக்கிய கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வருகிறது.

    பாஜக கட்சி லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. நாடு முழுக்க 303 இடங்களில் பாஜக அபார வெற்றியை பெற்றுள்ளது.

    பாஜக தற்போது தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் மோடி வரும் 30ம் தேதி மீண்டும் டெல்லியில் நடக்கும் விழாவில் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்! ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்!

    மோடி பதவி ஏற்பு

    மோடி பதவி ஏற்பு

    பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு தமிழக தலைவர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    என்ன அழைப்பு

    என்ன அழைப்பு

    இந்த பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பிதழ் செல்வது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். முக்கியமாக ரஜினி அரசியலுக்கு வர இருப்பதாக சொல்வதால் அவருக்கு கடிதம் செல்வது மிகவும் சாதாரண விஷயம். ஆனால் பதவி ஏற்பிற்கு பின் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. கூட்டணி கட்சிகள் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது.

    என்ன கூட்டம்

    என்ன கூட்டம்

    பதவி ஏற்பு விழா நடக்கும் 30ம் தேதிக்கு மறுநாள் டெல்லியில் இந்த கூட்டம் நடக்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் இதில் கலந்து கொள்ள உள்ளது. அதிமுக சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில்தான் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    பயண திட்டம்

    பயண திட்டம்

    ரஜினியின் டெல்லி பயண திட்டம் மூன்று நாட்கள் போடப்பட்டு உள்ளது. இந்த மாதம் 29,30, 31 ஆகிய நாட்கள் திட்டம் தீட்டப்பட்டுள்ளது,. 29 இரவு டெல்லி செல்லும் ரஜினி மறுநாள் காலை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார். அதன்பின் 31ம் நடக்கும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    நடிகர் ரஜினிகாந்த் எப்போது வேண்டுமானாலும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த போதுதான் ரஜினி முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த நிலையில் பாஜகவுடன் ரஜினி ஆலோசனை நடத்த இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    English summary
    Actor Rajini Gandhi may attend BJP party meet the day after PM Modi's inaugural ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X