Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ் கொலை வழக்கு..நளினி,முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை..31 ஆண்டு கால சிறை வாழ்க்கை - டைம் லைன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்ததாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல் 2022ஆம் ஆண்டு 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரை நிகழ்ந்த சம்பவங்களைப் பார்க்கலாம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 தமிழருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. கடந்த 2000ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தால் 2014ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்


அதேநேரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது. பேரறிவாளவன் தம்மை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியமானதாக இருந்தது.

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

குறிப்பாக 7 தமிழரை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் எந்த பரிந்துரையும் செய்யாமல் இருந்ததால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. பின்னர் பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது.

நளினி வழக்கு

நளினி வழக்கு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து,ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ரவிச்சந்திரனும் விடுதலை செய்ய கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

நளினி தரப்பு வாதம்

நளினி தரப்பு வாதம்

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த ஜூன் மாதம் நடைபெற்றபோது, அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

உயர்நீதிமன்றம் தள்ளுபடி

உயர்நீதிமன்றம் தள்ளுபடி

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அதேநேரம், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை குறித்து உயர்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என வாதிட்டது. 31 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி வாதிட்டனர். எனினும் நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். உச்சநீதிமன்றத்தை நாடவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 தமிழரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

1991 - 2022

1991 - 2022

பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல மீதமுள்ள 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார். நளினி உள்ளிட்ட அனைவரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் 6 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 31 ஆண்டு காலமாக சிறையில் இருந்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+