டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்யசபாவில் நீண்ட விவாதம்... அணை பாதுகாப்பு மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மிக நீண்ட விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் இன்று நிறைவேறியது.

அணைகள் பாதுகாப்பு மசோதா என்பது நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் ஒரே சீராக பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா 2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

மாநில உரிமைகள் பறிப்பு

மாநில உரிமைகள் பறிப்பு

இம்மசோதாவின் சரத்துப்படி அணைகள் பாதுகாப்பு உள்ளிட்ட நிர்வாகத்திற்காக அணைகள் பாதுகாப்பு தேசியக் குழு ஒன்று அமைக்கப்படும். தண்ணீர் என்பது மாநிலப் பட்டியலில் வரும் நிலையில் அணைகளை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் குரல். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் இம்மசோதாவுக்கு கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

அதிமுக, திமுக கடும் எதிர்ப்பு

அதிமுக, திமுக கடும் எதிர்ப்பு

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். அதேபோல் தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சி தலைவராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது இதனை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மீண்டும் அணை பாதுகாப்பு மசோதா

மீண்டும் அணை பாதுகாப்பு மசோதா

இந்த நிலையில் லோக்சபாவில் மீண்டும் அணை பாதுகாப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் மீண்டும் இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. இம்மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அணை பாதுகாப்புமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி சிவா நோட்டீஸ்

திருச்சி சிவா நோட்டீஸ்

முன்னதாக அணை பாதுகாப்பு மசோதாவை ராஜ்யசபா நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்திருந்தார். இது தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல் முறை, பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றினாலோ ராஜ்யசபாவில் அறிமுகம் செய்தாலோ ராஜ்யசபா நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன் என்றார்.

தமிழகம் ஏன் எதிர்க்கிறது?

தமிழகம் ஏன் எதிர்க்கிறது?

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். அதேபோல் தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சி தலைவராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது இதனை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

English summary
Rajya Sabha passes The Dam Safety Bill, 2019 today. The Bill provides for the surveillance, inspection, operation and maintenance of specified dams in India via a regulatory body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X