டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விமானத்தில் போக போறீங்களா.. ஆரோக்கிய சேது ஆப் உள்ளிட்ட 'இதெல்லாம்' கட்டாயம்.. மறந்துடாதீங்க !

Google Oneindia Tamil News

டெல்லி: ஆரோக்கிய சேது செயலி இருந்தால் மட்டுமே விமானத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான போக்குவரத்து துறை அமைச்கம் அறிவித்துள்ளது.

Recommended Video

    Domestic Flight Travel Rules In India

    மே 25ம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்தில் பயணிக்க புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    Registration on Aarogya Setu app and self-declaration is mandatory for air passengers

    இதன்படி விமானத்தில் பயணிக்க கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்திருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் டவுன்லோடு செய்யாமல் இருந்தால் டவுன்லோடு செய்தால் தான் பயணிக்க அனுமதிப்பார்கள்.

    பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயணம் முடியும் வரை முககவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

    விமான நிலையத்திற்குள் வாகனத்தை விட்டு இறங்கும் போதே உங்கள் ஆவணங்கள் மற்றும் இ ஆவணங்களை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பிலேயே (கேட்டில்) பயணிகள் தெர்மல் ஸ்கிரீனிங் (வெப்பமானியால் சோதனை) செய்யப்படும் இடத்திற்கு வர வேண்டும்.

    அதன்பிறகு அவர்கள் வெப்பமானியால் சோதிக்கப்படுவார்கள். அத்துடன் கேட்டில் நுழையும் போதே ஆரோக்கிய சேது ஆப்பை மொபைலில் நிறுவி இருக்க வேண்டும்.

    Registration on Aarogya Setu app and self-declaration is mandatory for air passengers

    ஒரு வேளை ஆரோக்கிய சேது ஆப் அவரது மொபைலில் இல்லை என்றால் கட்டாயம் அவர்கள் ஆரோக்கிய சேது ஆப் டவுன்லோடு செய்யும் இடத்திற்கு சென்று டவுன்லோடு செய்து நிறுவி உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு தான் பயணிக்க அனுமுதிக்கப்படுவார்கள்.

    ஒரு செக்-இன் பை மற்றும் ஒரு கேபின் பை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ஆன்லைனில் சரிபார்ப்பை உறுதிசெய்து போர்டிங் பாஸை பெற வேண்டும்.

    மேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்மேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்

    பயணிகள் தாமதமாக வரக்கூடாது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அல்லது கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தவர்கள் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

    பயணிகள் தாங்கள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கவில்லை, எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்று அறிவித்த பின்னரே விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் வழங்கும்.

    English summary
    Registration on Aarogya Setu app and self-declaration is mandatory. a list of guidelines for air passengers as domestic flights in the country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X