டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுங்கள்! வெறுப்பு பேச்சு விவகாரம்: சுப்ரீம் கோர்டில் வலதுசாரி அமைப்புகள்

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கைது செய்யக்கோரி இரண்டு வலதுசாரி அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிச. மாதம் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்ற மாநாட்டில் அஷ்வினி உபாத்யாய், வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளைப் பேசினார்கள். இந்த கூட்டம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது.

தேசிய வல்லமை தின போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலி தேசிய வல்லமை தின போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலி

இரண்டு மனுக்கள்

இரண்டு மனுக்கள்

இந்த தலைவர்கள் யாரும் தாங்கள் பேசியதை மறுக்கவில்லை. இந்தச் சூழலில் இந்த விவகாரத்தில் ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரித்வார் மற்றும் டெல்லி மதக் கூட்டங்களில் பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த மனுவை எதிர்த்து இரண்டு வலதுசாரி அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் அந்த இரு வலதுசாரி அமைப்புகளும் தங்களை வழக்கில் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.

வெறுப்பு பேச்சு இல்லை

வெறுப்பு பேச்சு இல்லை

இந்த மனுவில் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, வெறுப்பு பேச்சுகளுக்காக முஸ்லிம் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், தர்ம சன்சத் மாநாட்டில் இந்து மதத்தலைவர்களின் பேச்சு என்பது இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாசாரத்தின் மீதான தாக்குதல்களுக்கான பதில்கள் தானே தவிர, அவற்றை வெறுப்பு பேச்சு எனக் குறிப்பிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து ஆன்மீகத் தலைவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் முயற்சி தான் இது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியத் தலைவர்கள்

இஸ்லாமியத் தலைவர்கள்

ஹரித்துவார் பேச்சுக்கு எதிராக பத்திரிக்கையாளர் குர்பான் அலி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதைக் குறிப்பிடும் வகையில் தர்ம சன்சத் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நபர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்து தர்மம் சன்சாத் தொடர்பான விவகாரங்களில் அவர் ஆட்சேபனை எழுப்பக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் வாரிஸ் பதான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களை வெறுப்பு பேச்சுக்காகக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களுக்கு எதிரான பேச்சு

இந்துக்களுக்கு எதிரான பேச்சு

மற்றொரு வலதுசாரி அமைப்பான நீதிக்கான இந்து முன்னணி தனது மனுவில், முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதால் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளையும் உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 25 நிகழ்வுகளையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடிதம்

கடிதம்

சன்சத் மாநாட்டின் பேச்சை எதிராகப் பத்திரிக்கையாளர் குர்பான் அலி மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர், இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான இந்த வெறுப்பு பேச்சக்கை கண்டித்தும் இது நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி ஐந்து முன்னாள் தலைமைத் தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

English summary
Two right wing groups have filed counter-appeals in the Supreme Court opposing the plea against the hate speeches at religious gatherings in Haridwar. Hindu Sena president Vishnu Gupta has demanded that Muslim leaders be arrested for their hate speeches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X