• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''பாடல் வரிகளால் சுதந்திர விதையை தூவினர்''.. இந்திய சுதந்திர போராட்டத்தில் கவிஞர்களின் பங்கு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களுக்கு இடையே இந்திய மக்கள் அனைவரையும் சுதந்திரத்துக்காக போராட தூண்டிய கவிஞர்களின் வீர வரலாற்றை இதில் பார்க்கலாம்.

'கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்று நாமக்கல் கவிஞரால் உப்பு சத்தியாகிரகத்தின் போது பாடப்பட்ட பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.

வெள்ளையர்களை அகிம்சை வழியில் இந்தியாவில் இருந்து வெளியேற்ற பாடப்பட்ட இந்த பாடல் சுதந்திர தாகத்தோடு இருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம் நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம்

 சுதந்திர பாடல்கள்

சுதந்திர பாடல்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பங்கு எந்த அளவுக்கு உயர்ந்திருந்ததோ அதே அளவு சுதந்திர போராட்ட பாடல்களை எழுதிய கவிஞர்களின் பாடல்களுக்கும் மதிப்பிருந்தது. வெள்ளையர்களுடன் கத்தி, வால் உள்ளிட்ட ஆயுதங்களோடு நேருக்கு நேர் நின்று மோதாவிட்டாலும் ''கத்தி, அரிவாள் போன்றவற்றால் ஏற்படும் காயங்களை விட வலி மிகு வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம் உண்டு என்பது போல" சுதரந்திர கவிஞர்களின் வலி மிகு, உணர்ச்சி மிகுந்த பாடல் வரிகள் இந்திய மக்கள் அனைவரையும் சுதந்திரத்துக்காக போராட தூண்டியது. அந்த வரிசையில் ராம் பிரசாத் பிஸ்மிலும் தனது வலிமிகு வார்த்தையால் சுதந்திர பாடல்களை எழுதியுள்ளார்.

 புரட்சிக் கருத்துகள்

புரட்சிக் கருத்துகள்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த வீரரும், சிறந்த படைப்பாளியுமான ராம் பிரசாத் பிஸ்மில், ஆரிய சமாஜம் அமைப்பில் இணைந்து சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய 'சத்யார்த்த பிரகாஷ்' என்ற நூலை வாசித்தார். இதுவே இவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரிடம் விடுதலை வேட்கை எப்போதும் ஓங்கியிருந்தது. சிறு வயது முதல் கவிதை எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தார். இதன் காரணமாக அவரே ஏராளமான நூல்களை எழுதி, பின்னர் நூலையும் அவரே வெளியிட்டார். அந்த நூல்களை விற்று கிடைக்கும் பணத்தை வைத்தே புரட்சி செயல்பாடுகளுக்கு தேவையன ஆயுதங்களை வாங்கினார். இவரது பாடல்களில் அதிகளவு புரட்சிக் கருத்துகள் நிறைந்திருந்ததால் அதற்கு பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.

 பகத் சிங்கால் பாரட்டப்பெற்றவர்

பகத் சிங்கால் பாரட்டப்பெற்றவர்

இந்துஸ்த்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி இயக்கத்தை தொடங்கியவர்களுள் இவரும் ஒருவர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் பகத் சிங்கால் உருது மற்றும் இந்தி மொழியின் மிகச்சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்று பாராட்டப்பட்டார். சர்வரோசி கி தமன்னா என்ற இந்தி பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்ட இவர், ஆங்கிலேயரை எதிர்ப்பதர்காக 'மாத்ரிவேதி' என்ற புரட்சி அமைப்பு ஒன்றை உருவாக்கினார். இந்த அமைப்பை வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல்வேறு புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன் காரணமாக கடந்த தனது 30-ம் வயதில் அதாவது 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

 ஷியாம்லால் குப்தா

ஷியாம்லால் குப்தா

இதேபோல் விடுதலைக்காக பல உணர்சி மிகு பாடலகளை பாடியவர் ஷியாம் லால் குப்தா. 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி பிறந்த இவர் இந்தி பாடல்கள் ஏராளமானவற்றை பாடியுள்ளார். குறிப்பக இவர் எழுதிய நம் கொடி எப்போதும் உயரப் பறக்கட்டும் என்ற பாடல் சுதந்திரத்துக்கான தீயை அணைக்காமல் பார்த்துக்கொண்டது. மக்கள் மத்தியில் தேசபக்தியை எழச்செய்ததோடு, மூவர்ணக்கொடி மீதான பற்றையும் அதிகரிக்கும் வகையில் இவரது ஒவ்வொரு பாடல்களும் அமைந்தன. 1969-ம் ஆண்டு மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதை பெற்றார். தனது 80-ம் வயதில் 1977-ம் ஆண்டு இவர் இயற்கை எய்தினார்.

 மக்ஹன்லால் சதுர்வேதி

மக்ஹன்லால் சதுர்வேதி

இந்த வரிசையில் சுதந்திர போராட்ட பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் சுதந்திர தீயை பற்றவைத்தவர் மக்ஹன்லால் சதுர்வேதி. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத்திறன் கொண்ட இவரது நூல்களில் ''ஒரு மலரின் கனவுகள்'' மிகவும் பிரபலமானதாகும். தனது சுதந்திர போராட்டத்தையும், தனது சுதந்திர வேட்கையையும் பிரதிபலிக்கும் வகையில் உணர்ச்சிமிக்க வார்த்தைகளுடன் இந்த நூலை அவர் எழுதியிருந்தார். தேசபக்தி நிறைந்த மிகச்சிறந்த கவிதைப்படைபுகளில் இந்த நூலும் ஒன்றாக கருதப்படுகிறது.

 ஹரிவன்ஷ் ராய் பச்சன்

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

இதேபோல் மக்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை தன் பாடல்களின் மூலம் விதைத்தவர் ஹரிவன்ஷ் ராய் பச்சன். 1907 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த இவர் எழுதிய ''சுதந்திரத்துக்கான பாடல்கள்'' என்ற தொகுப்பு பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. சுதந்திரம் பெற்ற இந்தியர்களின் உணர்வுகளையும், ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியர்களின் உணர்வுகளையும் வெளிக்காட்டும் வகையில் இந்த பாடல் இருந்தது. 1966-இல் மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1969-இல் சாகித்திய அகாதமி விருதும், 1976-இல் பத்ம பூசண் விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As it is 75 years since the independence of India, we can see the heroic history of the poets who inspired all the people of India to fight for freedom among the soldiers who fought for freedom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X