ரஷ்யாவைத் தொடர்ந்து.. மேற்கத்திய நாடுகளின் அடுத்த குறி இந்தியா.. ரஷ்ய பிரதிநிதி எச்சரிக்கை
டெல்லி: ரஷ்யாவுக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது குறி வைக்கும் என ரஷ்ய பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருகிறது. இதை கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடையை விதித்துள்ளன.
ஆனால் இந்தியா மட்டும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து எண்ணெய்யை வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று கூட ரஷ்யாவுடன் இந்தியா இணக்கம் காட்டினால் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்திருந்தார்.

உக்ரைன் ரஷ்யா விவகாரம்
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா விவகாரம் குறித்து டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி எட்வார்டு அலெக்ஸாண்ட்ரோவிச் பசுரின் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் டான்பாஸ் பகுதியை பாதுகாக்க உக்ரைனின் கிழக்கு பகுதிக்கு ரஷ்ய படைகள் சென்றுள்ளன. டொனெட்ஸ்க் பகுதி 65 சதவீதம் எங்கள் கட்டுப்பாட்டிலும் 35 சதவீதம் உக்ரைன் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

முக்கியமானது
பிரதான கட்டுப்பாடு குடியரசின் தெற்கில் உள்ளது (அவர்கள் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என்று அழைக்கிறார்கள், இப்போது ரஷ்யாவால் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது), வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் உக்ரேனிய போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு முக்கிய பிரச்சினையே உக்ரைன் ராணுவம் தனது படைகளை வாபஸ் பெறவில்லை. டான்பாஸ் பகுதியின் தெற்கே உக்ரைன் நாட்டின் ஆயுதமேந்திய 1 லட்சம் வீரர்கள் குவிந்துள்ளனர்.

1.50 லட்சம் வீரர்கள்
உக்ரைனின் பகுதிகளான கீவ், கார்கீவ், ஒடேஸா ஆகிய பகுதிகளுக்கு ஆயுதங்களை ஐரோப்பா வழங்கி வருகிறது. எங்களுக்கு அவர்கள் எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை. உக்ரைன் ராணுவத்தினர் மொத்தமாகவே 2.42 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் அவர்களில் 1.50 லட்சம் பேர் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (இது ரஷ்யாவால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது) பக்கம் குவிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியென்றால் அவர்கள் ஏதோ ஒரு தாக்குதலை நடத்தவிருந்தார்கள் என்றுதானே அர்த்தம்.

ஆயுதங்கள்
இந்த தாக்குதலை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க அவர்கள் திட்டமிட்டு ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவித்திருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் ராணுவம் பலமில்லாமல்தான் இருந்தது. ஆனால் இப்போது அது வலுமையாக உள்ளது. இதற்கு அவர்களுக்கு 8 ஆண்டுகள் ஆனது. நேட்டோ நாடுகளின் ஆலோசகர்களின் நேரடி பங்களிப்பு இருந்தது.
Recommended Video

வரலாற்று சூழல்
வரலாற்று சூழலில் இந்தியாவின் நிலைமையை ஒப்பிட்டு பார்க்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இந்தியர்கள் கிளர்ந்தெழுந்த போது அவர்களிடம் பிரிட்டிஷ் ராணுவத்தை போல ஆயுதங்களோ திறமைகளோ அனுபவமோ இல்லை. ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்து அதை சாத்தியம் என்பதை காட்டியது. மக்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கை வலுவாக உள்ளது என்பதையும் நிரூபித்தது. இங்கேயும் அப்படித்தான். மேற்கு நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புகிறது. அத்தோடு நின்றுவிடாது. அதன் அடுத்த குறி இந்தியாவாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications