டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டியில் இருந்து விலக வலியுறுத்துமாறு கூறினாங்க.. ராகுல் என்ன சொன்னார் தெரியுமா.. சசி தரூர் பரபர

Google Oneindia Tamil News

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ள என்னை போட்டியில் இருந்து விலக வலியுறுத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாக சசி தரூர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு உள்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் இடையே நேரடி போட்டி உள்ளது.

காங்கிரஸ் தேர்தல் இருக்கட்டும்.. நட்டா எப்போ வேட்புமனு தாக்கல் செய்தார்? பாஜவை கலாய்த்த ப.சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் இருக்கட்டும்.. நட்டா எப்போ வேட்புமனு தாக்கல் செய்தார்? பாஜவை கலாய்த்த ப.சிதம்பரம்

சசி தரூருக்கு ஆதரவு குறைவு

சசி தரூருக்கு ஆதரவு குறைவு

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சியின் மேலிட தலைவர்கள் பலரின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே இதை யூகிக்கும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால், மறுபக்கம் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடைய ஆதரவும் பெரிய அளவில் இல்லாமல் சசி தரூர் போட்டிக் களத்தில் உள்ளார். தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரும் பணியில் இரு தாலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சொந்த மாநிலத்தில் கூட ஆதரவு இல்லை

சொந்த மாநிலத்தில் கூட ஆதரவு இல்லை

இந்த நிலையில், சசி தரூருக்கு அவரது சொந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது. கேரள காங்கிரஸ் தலைவரான கே சுதாரகன் வெளிப்படையாக கேரள காங்கிரஸ் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார். சசி தரூருக்கு சற்று அதிர்ச்சியை இது ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில், என்னை போட்டியில் இருந்து வாபஸ் பெற சொல்லுமாறு ராகுல் காந்தியிடம் சில மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்ததாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மறுத்துவிட்டார்

ராகுல் காந்தி மறுத்துவிட்டார்

ஆனால், இதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டதாகவும் சசி தரூர் போட்டியிடுவது கட்சிக்கு நன்மையே பயக்கும் என்று ராகுல் காந்தி நம்பியதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார். மேலும் சசி தரூர் கூறுகையில், கட்சியில் பெரிய தலைவர்கள் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. தங்கள் வாக்குகள் அடையாளம் காணப்பட்டு விடும் என்று எந்த ஒருவாக்காளரும் அச்சப்பட வேண்டாம்.

கட்சி தலைமையின் அறிவிப்பு

கட்சி தலைமையின் அறிவிப்பு

மதுசூதன் மிஸ்த்ரி அறிக்கை வருவதற்கு முன்பே கேரள காங்கிரஸ் தலைவர் எனக்கு ஆதரவு இல்லை என்பது போன்ற அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். இந்த சிறிய விஷயத்திற்காக நான் புகார் கூறப்போவது இல்லை'' என்றார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள எவரும் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்று கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Sasi Tharoor has made a sensational allegation that many senior Congress leaders urged Rahul Gandhi to urge him to withdraw from the All India Congress party president election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X