டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கூடாது.. நீட்டை ஒத்திவையுங்கள்.. சோனு சூட் அதிரடி குரல்!

நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும், மாணவர்களின் வாழ்க்கையில் நாம் ரிஸ்க் எடுக்க கூடாது என்று நடிகர் சோனு சூட் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும், மாணவர்களின் வாழ்க்கையில் நாம் ரிஸ்க் எடுக்க கூடாது என்று நடிகர் சோனு சூட் தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே இந்தியா முழுக்க மக்களுக்கு சோனு சூட் உதவி வருகிறார். அதிலும் தென்னிந்திய மக்களுக்கு அதிகமாக உதவி வருகிறது. அவ்வப்போது சமூக ரீதியான கருத்துக்களையும் இவர் கூறி வருகிறார்.

தற்போது நீட் தேர்வு தொடர்பாக இவர் கருத்து கூறி உள்ளார். நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-6 வரையும் நடக்க உள்ள நிலையில் தற்போது தொடர்பாக சோனு சூட் பேசி உள்ளார்.

செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு.. செப்டம்பர் 1-6 வரை ஜேஇஇ தேர்வு.. தேசிய தேர்வு ஆணையம் அறிவிப்பு!செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு.. செப்டம்பர் 1-6 வரை ஜேஇஇ தேர்வு.. தேசிய தேர்வு ஆணையம் அறிவிப்பு!

மாஸ்க், சானிடைசர் கட்டாயம்.. சமூக இடைவெளி அவசியம்.. நீட் தேர்வுக்கு புதிய ரூல்ஸ் அறிவிப்பு!மாஸ்க், சானிடைசர் கட்டாயம்.. சமூக இடைவெளி அவசியம்.. நீட் தேர்வுக்கு புதிய ரூல்ஸ் அறிவிப்பு!

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசுக்கு என் தரப்பு சார்பாக கோரிக்கை வைக்கிறேன். நாடு இப்படி இருக்கும் சூழ்நிலையில் தேர்வு நடத்துவது சரியில்லை. நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும்.

கொரோனா காலம்

கொரோனா காலம்

கொரோனா காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிக அதிக கவனத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்களின் வாழ்க்கையில் நாம் ரிஸ்க் எடுக்க கூடாது, என்று சோனு சூட் அவரின் டிவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் டிவிட்டிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முக்கியமாக தமிழர்கள் பலர் இவரைய ஆதரித்துள்ளனர்.

எதிர்ப்பு தெரிவித்தனர்

எதிர்ப்பு தெரிவித்தனர்

நீட் தேர்வு குறித்து பெரிய அளவில் பாலிவுட் நடிகர்கள் யாரும் பேசவில்லை. தமிழில் சூர்யா போன்ற சிலமட்டுமே பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சோனு சூட் தைரியமாக தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்து உள்ளார். இதனால் இவரை பலரும் ஆதரித்து டிவிட் செய்து வருகிறார்கள். அதே சமயம் அரசுக்கு எதிராக பேசுகிறார் என்று இவருக்கு எதிராகவும் சிலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

 மோடி புகைப்படம்

மோடி புகைப்படம்

இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்று சோனு டிவிட் செய்து இருந்தார். இதற்காக அவர் மோடி இருக்கும் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த டிவிட்டை பலரும் கடுமையாக எதிர்த்து இருந்தனர். இதனால் சோனு சூட் அந்த டிவிட்டை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sonu Sood asks government to postpone Neet and JEE exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X